Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Digital Wallet Novi is No Longer: இனி இந்த செயலி இல்லை… கிரிப்டோ பயனர்களே உஷார்… செப்டம்பர் மாதத்திற்குள் இத கண்டிப்பா பண்ணனும்..!

Gowthami Subramani July 05, 2022 & 13:30 [IST]
Digital Wallet Novi is No Longer: இனி இந்த செயலி இல்லை… கிரிப்டோ பயனர்களே உஷார்… செப்டம்பர் மாதத்திற்குள் இத கண்டிப்பா பண்ணனும்..!Representative Image.

Meta Closing Its Cryptocurrency Project Novi: அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே, மெட்டா அதன் டிஜிட்டல் வாலட்-ஆன நோவி திட்டத்தை மூட விருப்பதாகத் தெரிவித்துள்ளது (Meta is Finally Closing Its Cryptocurrency).

கிரிப்டோ சந்தைகள்

இன்றைய கால கட்டத்தில் கிரிப்டோவில் இன்வெஸ்ட் செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இதில் முதலீடு செய்வது நம்பகத்தன்மையக் கொடுக்காத போதிலும், இதில் முதலீடு செய்ய ஏராளக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். ஆனால், நாளுக்கு நாள் இதன் விளைவுகள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது (Meta Finally Closing Its Project Novi).

நோவி அறிமுகம்

வாட்ஸ் அப் செயலியின் வழியாக கிரிப்டோக்களை அனுப்பவும், பெறவும், நோவி என்ற டிஜிட்டல் வாலட்டை மெட்டா உருவாக்கியது. இது எந்தவித கட்டணமும் இல்லாமல் கிரிப்டோ பயன்பாட்டை இயக்குவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் உருவாக்கப்பட்டது (Digital Wallet Novi is No Longer).

கிரிப்டோ வீழ்ச்சி

ஆனால், கிரிப்டோ தொடர்ந்து சரிவுப் பாதையில் செல்கிறது. இந்த கடும் சரிவினால், சமீபத்திய உயிரிழப்புகளின் ஒன்றாக நோவி பயனர்களும் இடம் பெறுகின்றனர். இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. கிரிப்டோவின் இந்த சரிவால், பயனர்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர் (Meta Finally Closing Its Novi).

விரைவில் மூடப்படும் நோவி

அதன் படி, ஃபேஸ்புக் பெற்றோர் மெட்டாவுக்குச் சொந்தமான டிஜிட்டல் வாலட் நோவியை வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அதன் செயல்பாட்டை நிறுத்த உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த நோவி செயல்பாட்டைப் பயன்படுத்தி, கிரிப்டோ தகவல்களையும், மீதமிருக்கும் கிரிப்டோ சமநிலையையும் செப்டம்பர் 1 வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த குறிப்பிடப்பட்ட காலத்திற்கும் தகவல்கள் மற்றும் க்ரிப்டோ செயல்பாடுகளைப் பெறாதவர்கள் இந்த கணக்குகளைச் செயல்படுத்தும் உரிமையை இழப்பர் (Meta is Closing Its Cryptocurrency Project).

செப்டம்பர் 1 வரை தான் அவகாசம்

அதே போல, கிரிப்டோ பயன்பாட்டில் இயக்கிய நிலுவைத்தொகையை வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பயனர் இந்த நிலுவைத் தொகையைத் திரும்பப் பெற மறந்து விட்டால், அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கு அல்லது அந்த சேவையில் சேர்க்கப்பட்டிருக்கும் டெபிட் கார்டுக்கு பரிமாற்றம் செய்ய மெட்டா முயற்சிக்கும். மேலும், இந்த குறிப்பிடப்பட்ட செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகு, நோவி செயலியும், வாட்ஸ்அப்-உடன் ஒருங்கிணைக்கப்பட்டதும் கிடைக்காது. இனி நோவி செயலியின் மூலம் ஜூலை 1 முதலே பணத்தைச் சேர்க்க முடியாது (Novi Coin Price Prediction).

ஒரே வருடத்தில் இல்லாமல் போன நோவி

கடந்த அக்டோபர் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நோவி இனி செயல்படாததற்குக் காரணம் கிரிப்டோவின் வீழ்ச்சியே ஆகும். இதனை மெட்டாவின் கிரிப்டோகரன்சி திட்டங்களின் தலைவராக விளங்கும் டேவிட் மார்கஸ் கூறியுள்ளார் (Meta Finally Closing Its Cryptocurrency Project).

இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் ஆடை, கலை வீடியோக்கள், இசை அனுபவங்கள், விர்சுவல் நிகழ்ச்சிகள் போன்றவற்றை உருவாக்குவதாக மெட்டாவின் CEO Mark Zuckerberg கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.

இந்த வாலட் பல்வேறு Metaverse அனுபவங்களில் இயங்கக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், கிரிப்டோ சரிவால் நோவி செயலி இனி பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்