Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அசால்ட்டாக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக திருடும் ஹேக்கர்ஸ்… வெளிவந்த பகீர் தகவல்..

Gowthami Subramani October 08, 2022 & 13:30 [IST]
அசால்ட்டாக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக திருடும் ஹேக்கர்ஸ்… வெளிவந்த பகீர் தகவல்..Representative Image.

உலகின் மிகப்பெரிய் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஃபைனான்ஸிலிருந்து, ஹேக்கர்கள் $100 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருடியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிப்டோகரன்சிகளை நம்ப வேண்டாம் என்று பரவி வந்தாலும், அதற்கான தாக்கம் குறைந்தபாடில்லை. கிரிப்டோவில் இன்றும் பணத்தை இழந்து, ஏமாந்து இருப்பவர்கள் ஏராளம் பேர். அதன் படி, உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக விளங்கும் எக்ஸ்சேஞ்ச் ஃபைனான்ஸிடமிருந்தே 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இதனை, BNB என அழைக்கப்படும் தி பைனான்ஸ் பிளாக்செயின் உறுதிபடுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இயங்குதளம், ஹேக்கர்களால் மொத்தம் 2 மில்லியன் BNB டோக்கன்கள் அதாவது கிட்டத்தட்ட 568 மில்லியன் டாலர் மதிப்பு திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், BMB சங்கிலியை நிறுவனம் இடை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாகவும், 100 மில்லியன் டாலருக்கும் அதிகமானவற்றை மறைத்து விட்டன. இதனால், மீதமுள்ள டோக்கன்களை சைபர் குற்றவாளிகளால் மாற்ற முடியவில்லை.

இது குறித்து, பைனான்ஸ் CEO ஆன ஜாவோ கூறுகையில், “இந்த மீறலின் தாக்கம் கிட்டத்தட்ட $100 மில்லியன் முதல் $110 மில்லியன் வரை இருக்கும். உங்களது நிதி பாதுகாப்பாக உள்ளது. இந்த சிரமத்திற்கு வருந்துகிறோம். மேலும், இதற்கேற்ற புதுப்பிப்புகளை வழங்குவோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஒரு பொது நூலகத்தில் அதிநவீனமாக உருவாக்கப்பட்டதன் மூலம், குறைந்த அளவிலான ஆதாரம் சுரண்டப்பட்டது. மேலும், இந்த BNB செயினில் உள்ள ஒவ்வொரு குறிப்பிடத்தக்க பிழைக்கும் $1 மில்லியன் டாலர்கள் தருவதாக நிறுவனம் கூறியது.

இதனைத் தொடர்ந்து, பணத்தைத் திருடிய ஹேக்கர்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசு உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிதியில் 10% வரை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கும், பாதுகாப்பிற்காகவும், BNB சங்கிலியில் ஒரு புதிய On-chain governance mechanism ஒன்றை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக, கிரிப்டோ பரிவர்த்தனைகளில் உள்ள Cross-chain bridges-ஐக் குறிவைத்து, தாக்குதல்கள் நடந்துள்ளது. இவ்வாறே கடந்த ஜூன் மாதம் 100 மில்லியன் டாலர்களை Harmony’s Horizon Bridge-லிருந்து ஹேக்கர் ஒரு பிழையைப் பயன்படுத்தி திருடினார். இதே போல, ஆகஸ்ட் மாதத்தில் சைபர் குற்றவாளிகள் $190 மில்லியன் மதிப்புள்ள கிரிப்டோவைத் திருடியுள்ளனர்.

எத்தனை முன்னெச்சரிக்கைகளையும், பாதிப்பையும் ஏற்படுத்தினாலும், கிரிப்டோவைப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை குறையாமலே இருக்கிறது. இதனால், ஏராளக்கணக்கானோர் பிரச்சனைகளுக்கு உள்ளாகி பெரும் விளைவைச் சந்தித்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்