Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிட்காயின் தெரியும்… அது என்னப்பா பிட்காயின் மைனிங்..!

Gowthami Subramani July 27, 2022 & 19:00 [IST]
பிட்காயின் தெரியும்… அது என்னப்பா பிட்காயின் மைனிங்..!Representative Image.

Bitcoin Mining in Tamil: கிரிப்டோகரன்சி தொழில்நுட்பத்தைக் கேள்விபட்டிருப்போம். இன்றைய காலகட்டத்தில் எளிமையான முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

கிரிப்டோகரன்சி நல்லதா? கெட்டதா?

நிபுணர்களின் கருத்துப் படி, கிரிப்டோகரன்சி ஆபத்தானது என கூறுகின்றனர். பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் இருப்பவர்களும், கிரிப்டோகரன்சியின் ஆபத்தையே கூறுகின்றனர். அப்படி இந்த கிரிப்டோகரன்சியில் இருக்கும் ரகசியங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பிட்காயின் தொழில்நுட்பம்

கிரிப்டோகரன்சி என்பது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படுவதாகும். இதில் பிளாக்செயின் மைனிங் என்ற தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது. கிரிப்டோகரன்சியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் பிட்காயின் பற்றியும், பிட்காயின் மைனிங் பற்றியும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

பிட்காயின் மைனிங்

கிரிப்டோகரன்சியில் இயங்கும் ஏற்கனவே உள்ள பிளாக்செயின் உடன் புதிதாக இணைக்கக் கூடிய பிளாக்குகளை முந்தைய பிளாக்குடன் இணைக்கும் பணியைச் செய்யக் கூடிய ஒரு மென்பொருளாகும். பிளாக்செயின் மைனிங் மட்டுமல்லாமல் இதில் NODE என்ற மற்றொரு மென்பொருளும் உள்ளது. இந்த NODE மூலம், பிட்காயினில் நடக்கக் கூடிய அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க முடியும். மேலும், பரிவர்த்தனைகளின் வரலாற்றையும் இதன் மூலம் கண்காணிக்கலாம்.

மைனிங் செயல்பாடு

சாதாரணமாக இந்த மைனிங் செயல்பாட்டை ஒருவரால் செயல்படுத்த முடியாது. இதற்கான செலவு நம்மால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.

இந்த பிட்காயின் மைனிங் செயல்முறைக்காகவே சில நிறுவனங்கள் அல்லது குழுவாக மைனிங் செயல்பாட்டைச் செய்ய மைனிங் பணியாளர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் கொண்டுள்ள வளங்களைப் பயன்படுத்தியே ஒரு புதிய பிளாக்குகளை உருவாக்கியும், அதனை முந்தைய பிளாக்செயினுடன் இணைத்தும் வருகின்றனர். பிட்காயின் மைனிங் செய்பவர்களுக்கு பிட்காயின்கள் வெகுமதிகளாகக் கிடைக்கப் பெறுகின்றன.

மைனிங் Algorithm

டிஜிட்டல் பயன்பாடுகளில் சாதாரண கணினிகளால் இந்த மைனிங் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. இதற்காக SHA-256 Algorithm பயன்படுத்தப்படுகிறது. இது NSA ஆல் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அதன் படி, இந்த அல்காரிதம் பயன்படுத்தியே நம்மால் மைனிங் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் முடியும்.

மைனிங் பணியாளர்கள் கிரிப்டோகரன்சி செயல்பாட்டுக்கான பிட்காயின் இணைப்பதில் அதிக அளவில் நேரம், கணினி மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இது Proof of Work என அழைக்கப்பட்டு பிட்காயின் நெட்வொர்க் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதற்கு புரோகிராமானது உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்தச் செயல்முறை பல கணினிகளில் உதவி கொண்டு நடக்கும். எனவே, இதனை ஹேக் செய்வது கடினமாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்