Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cylinder Rate Increases Today in Tamil: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை…! எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani June 17, 2022 & 19:30 [IST]
Cylinder Rate Increases Today in Tamil: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை…! எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Cylinder Rate Increases Today in Tamil: சமீப காலமாக சிலிண்டர் விலை உயர்வுடன் காணப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிலிண்டர் புதிய இணைப்புப் பெறுவதற்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய முழு விவரங்களையும் இந்தப் பதிவில் காண்போம்.

வீட்டு உபயோகத்திற்கு

சிலிண்டர் இணைப்பு ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால், சமீப காலமாக சிலிண்டரின் விலை மிக அதிக அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் படி, வீட்டு உபயோகத்திற்காக புதிய இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகையில் கூடுதலாக ரூ.750 ஐ உயர்த்தியுள்ளது.

இதுவரை இருந்த சமயத்தில், சிலிண்டர்களுக்கான புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ. 1.450 ஆக இருந்தது. ஆனால், தற்போது ரூ. 2,200 ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் நிறுவனத்தின் அறிக்கை

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், வீட்டு உபயோகத்திற்காகப் புதிதாக இணைக்கப்படக் கூடிய சிலிண்டர் இணைப்பினுடைய வைப்புத் தொகை ரூ. 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தக் கூறிய 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒவ்வொன்றிற்குமே புதிய இணைப்புக்கான கட்டணம் ரூ.1,450 -லிருந்து ரூ. 2,200 ஆக உயர்த்தியுள்ளது.

மேலும், புதிய இணைப்புக்கு வரக்கூடிய பைப், பாஸ்புக் போன்றவற்றிற்கு ரூ. 150 மற்றும் ரூ. 25 செலுத்த வேண்டும். மேலும், சிலிண்டர் அடுப்புக்குத் தேவைப்படக்கூடிய ரெகுலேட்டர் விலையும் ரூ. 100 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, இதன் விலை ரூ. 150-லிருந்து ரூ. 250- ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பைப் பெறக்கூடிய பயனாளிகளுக்கு இதற்கு முன்னரே இருக்கும் நடைமுறைதான் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்