Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவ்வளவு பணத்த நன்கொடையா கொடுப்பாங்களா - உலகம் வியக்கும் வாரன் பஃபெட் | Warren Buffett

Abhinesh A.R Updated:
இவ்வளவு பணத்த நன்கொடையா கொடுப்பாங்களா - உலகம் வியக்கும் வாரன் பஃபெட் | Warren BuffettRepresentative Image.

தற்போதைய நிலவரப்படி உலக பணக்காரர்கள் வரிசையில் ஆறாவது இடத்தில் இருப்பவர் வாரன் பஃபெட். இவர் சிறு வயதில் இருந்தே சிறுக சிறுக பங்குகளை வாங்கி, அதன் வருவாயில் இருந்து பல நிறுவனங்களை வாங்கினார். இவற்றை தான் நிர்வகிக்கும் பெர்க்ஷயர் ஹாத்வே‌ நிறுவனத்திற்குள் கொண்டு வந்து, உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் தான், தான் நிர்வகித்து வந்த 4.64 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை, 5 அறக்கட்டளைகளுக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளார் வாரன் பஃபெட்.

இவ்வளவு பணத்த நன்கொடையா கொடுப்பாங்களா - உலகம் வியக்கும் வாரன் பஃபெட் | Warren BuffettRepresentative Image

எந்த நிறுவனத்திற்கு எத்தனை கோடி

வாரன் பஃபெட் இந்திய மதிப்பில் சுமார் 380 ஆயிரம் கோடியை அளித்துள்ள நன்கொடையில் பெரும்பகுதி மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு கொடுக்கப்படுகிறது. இதில் 10.45 மில்லியனுக்கு அதிகமான பங்குகள் அடங்கும் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், மறைந்த முதல் மனைவியின் பெயரில் தொடங்கப்பட்ட சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கு 1.05 மில்லியன் பங்குகளை நன்கொடையாக ஒதுக்கியுள்ளார். பின்னர், அவரது பிள்ளைகள் ஹோவர்ட், சூசன், பீட்டர் ஆகிய மூன்று பேரின் தலைமையில் நிர்வகிக்கப்படும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு மீதித் தொகையை கணிசமாகப் பிரித்து வழங்கி உள்ளார்.

இவை ஹோவர்ட் ஜி பஃபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை, நோவோ அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகள் ஆகும். வாரன் பஃபெட், பில் கேட்ஸ் சிறந்த நண்பர்கள் என்பது உலகறிந்தது. இவர்கள் தான் கொடை அளிப்பதில் முன்னோடியாக திகழ்கின்றனர்.

இவ்வளவு பணத்த நன்கொடையா கொடுப்பாங்களா - உலகம் வியக்கும் வாரன் பஃபெட் | Warren BuffettRepresentative Image

யார் இந்த வாரன் பஃபெட்

முதலீட்டு ஜாம்பவனான இவருக்கு தற்போது 92 வயது. திறமையான பங்கு சந்தை வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற இவர், அதுகுறித்து பல நூல்களை எழுதி உள்ளார். இவரால் உருவாக்கப்பட்ட பெர்ஷயர் ஹாத்வே நிறுவனம் பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இவர் தான் சம்பாதித்த 99% விழுக்காடு பணத்தை அறக்கட்டளைகளுக்காக வழங்குவேன் என உறுதிமொழி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்டத்தட்ட $117 பில்லியன் அமெரிக்க டாலர்களை சொத்து மதிப்பாகக் கொண்டுள்ளார்.

பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல இவரது தொழில். சம்பாதித்த பணத்தை கஷ்டபடும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவும் நல்ல குணமும் இவரிடத்தில் உள்ளது. இவர் இல்லாத மக்களுக்காக செலவு செய்யும் தொகையை பார்த்து பெரும் செல்வந்தர்களே வாயடைத்து போனதுண்டு. அதுமட்டும் இல்லாமல், இவரை பின்பற்றி பலரும் இது போன்ற சேவைகளுக்காக அறக்கட்டளைகளுக்கு பெரும் தொகை வழங்கி வருகின்றனர். ஆனால், தானம் செய்வதில் யாரும் இவரை இதுவரை தோற்கடிக்க முடியவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்