Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களா நீங்கள்..? புதிதாக மாற்றப்பட்ட விதிகள் இதோ.. தவறாம படிங்க….

Gowthami Subramani [IST]
டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களா நீங்கள்..? புதிதாக மாற்றப்பட்ட விதிகள் இதோ.. தவறாம படிங்க….Representative Image.

 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான விதிகள் ரிசர்வ் வங்கி மூலம் அவ்வப்போது மாற்றி அல்லது திருத்தி அமைக்கப்படும். இந்த புதிய விதிகள் மற்றும் வழிமுறைகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமையுமாறும், ஆன்லைன் முறையிலேயே அனைத்து சேவைகளையும் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மற்றும் ஆன்லைனில் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்டவைகள் சில மாற்றங்களைக் கொண்டு வர அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவ்வாறே, அக்டோபர் 1 ஆம் நாள் இந்தப் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

முதன்மை வழிகாட்டி

முன்னதாகவே, ஜூலை மாதம் 1 ஆம் நாள் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கக் கூடிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், “கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு” வழங்குதல் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான நடத்தை விதிமுறைகளை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஆனால், இதனை உடனடியாக செயல்படுத்த முடியாது என பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வந்ததன் காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 3 மாத காலங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் முதல் இந்தப் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

  • வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யக் கூடாது என்பது முக்கியமான விதியாகும்.
  • கிரெடிட் கார்டு அனுப்பப்பட்ட வாடிக்கையாளர்கள், அதனைப் பெற்ற தேதியிலிருந்து, 30 நாள்களுக்குள் ஆக்டிவேட் செய்யவில்லை எனில், வங்கியோ அல்லது நிதி நிறுவனங்களோ ஆக்டிவேட் செய்யக் கூடாது.
  • அதன் படி, இதிலிருந்து தெளிவாகத் தெரிவது பயனர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே, வங்கிகள் அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
  • அதே போல, வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, OTP அடிப்படையில் தான், கடன் வழங்கக் கூடிய நிறுவனங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
  • இதுவே, வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், கிரெடிட் கார்டு வழங்கிய நிதி நிறுவனமே அந்த அட்டையை கேன்சல் செய்யலாம்.
  • மேலும், கிரெடிட் கார்டு தேவையில்லை என வாடிக்கையாளர்கள் உறுதியளித்த 7 நாள்களுக்குள் கார்டை ரத்து செய்ய வேண்டும். அதே போல, வாடிக்கையாளர்களிடமிருந்து, இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
  • கார்டு லிமிட்டை வாடிக்கையாளரின் அனுமதி பெறாமல் மாற்றக் கூடாது. மேலும், கார்டு வழங்கக் கூடிய நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள், கார்டு லிமிட்டை வாடிக்கையாளர்களின் ஒப்புதலோடு தான் வழங்கியுள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஜூலை 1 ஆம் நாள் முதலே அமலுக்கு வர வேண்டிய இந்த விதிமுறைகள், செப்டம்பர் 30 ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Debit Card Credit Card New Rules in Tamil | Features of Credit Card | Types of Debit Cards | Credit Card Benefits | Debit Card Rules from 2022 | RBI Guidelines for Credit Card 2022 | Credit Card Rules and Regulations | RBI Guidelines for Credit Card Payment Recovery | How to tokenize a Debit Card | RBI Guidelines for Debit Card charges | New Credit Card Rules October 2022 | Debit Card Rules Tamilnadu | Debit Card Rules India | FSA Debit Card Rules | New Debit Card Rules | Visa Debit Card Rules | SBI Debit Card Rules | Enterprise Debit Card Rules | HSA Debit Card Rules | RBI Debit Card Rules | RBI New Credit and Debit Card Rules | New Credit and Debit Card Rules | Hertz Debit Card Rules | Debit Credit Card Rules 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்