Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Difference Between Current Account and Savings Account in Tamil: Current Account Vs Savings Account…! இந்த இரண்டுக்கும் இவ்ளோ வித்தியாசமா..? இனிமே பாத்து தான் அக்கவுன்ட் ஓபன் பண்ணனும்.

Gowthami Subramani May 27, 2022 & 11:35 [IST]
Difference Between Current Account and Savings Account in Tamil: Current Account Vs Savings Account…! இந்த இரண்டுக்கும் இவ்ளோ வித்தியாசமா..? இனிமே பாத்து தான் அக்கவுன்ட் ஓபன் பண்ணனும். Representative Image.

Difference Between Current Account and Savings Account in Tamil: நடப்பு கணக்கு (Current Account), சேமிப்பு கணக்கு (Savings Account) என இந்த இரண்டு கணக்குகளுமே பொதுவாக தனி நபரோ, அல்லது நிறுவனமோ வங்கி கணக்குகளில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்துள்ளார்கள் என்பதைக் குறிப்பதாகும் (Current Account vs Savings Account in Tamil).

Difference Between Current Account and Savings Account UPSC | Difference Between Savings and Current Account in India | Current Account Tamil Meaning | Difference Between Current Account and Savings Account? - Quora | What are the benefits of current account and Savings account | How to know if account is savings or current by account number | Difference between current account and fixed deposit account | What is current account

நடப்பு கணக்கு (Current Account Meaning in Tamil)

வங்கிக் கணக்குகளில் நடைபெறக் கூடிய பணப் பரிவர்த்தனைகளை பதிவு செய்வது நடப்பு கணக்கு ஆகும். குறிப்பாக பொருள்கள் மற்றும் சேவைகளில் நிகர வர்த்தகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும், நடப்பு கணக்கில் உள்ளவை தினசரி வீதத்தில், உபயோகித்துக் கொண்டே இருக்கப்படும். இதில், பணப் பரிவர்த்தனை அதிகமாக இருக்கும். பிசினஸ் செய்யும் நபர்கள், இதனை அதிகமாகப் பயன்படுத்துவர்.

சேமிப்பு கணக்கு (Savings Account Meaning in Tamil)

சேமிப்பு கணக்கு என்பது, நமது பணத்தைச் சேமிப்பதற்காக, வைத்துக் கொள்ளும் அக்கவுண்டாகும். உதாரணமாக, பணியில் உள்ளவர்கள், மாதந்தோறும் பெறும் ஊதியத் தொகையை அதில் பெற்றுக் கொண்டு வந்தால், அந்தத் தொகை சேமிப்பாக இருக்கும். இதனை, எப்போது நமக்கு வேண்டுமோ, அந்த சமயத்தில், இந்த அக்கவுண்டிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

சேமிப்பு மற்றும் நடப்பு அக்கவுண்டுகளை எப்படி கணக்கு வைப்பது?

வங்கியில், சேமிப்பு அக்கவுண்டைத் திறப்பதற்கு, சரியான முகவரி, தனி நபரின் ஆதாரம் (Identity Proof), ஃபோட்டோ போன்றவை தேவையானது (Current vs Savings Account).

நடப்பு கணக்கைத் திறக்கவும் தனி நபரின் ஆதாரம், சரியான முகவரி அவசியமானவை. இதனுடன், தொழில் செய்வதற்கான தகவல், மற்றும் ஆதாரம் போன்றவை தேவைப்படும். உதாரணமாக, இந்த அக்கவுண்ட் திறப்பதற்கு, GST ஆவணங்கள் தேவை. நடப்பு அக்கவுண்டுகள் பிசினஸ் செய்யும் நபர்கள் உபயோகிப்பதால், இது முக்கியமான ஒன்றாக உள்ளது.

நடப்பு கணக்கு vs சேமிப்பு கணக்கு (Current and Savings Account Difference)

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும், இந்த இரண்டு வகையான அக்கவுண்டுகளைத் தெரிந்து கொண்டிருத்தல் மிகவும் அவசியம் ஆகும் (Difference Between Current Account and Savings Account in Tamil).

காரணிகள்

சேமிப்பு கணக்கு

நடப்பு கணக்கு

பயன்கள்

ஒரு நபரின் சேமிப்பு கணக்கு அவருடைய சொந்த வேலைகளுக்காக திறக்கப்பட்டதாகும்

நடப்பு கணக்கு, பிசினஸ் பயன்பாட்டிற்காக வைத்துக் கொள்வது ஆகும்

வட்டி (Interest)

சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி உண்டு

நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி கிடையாது

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் (Transactions Limitations)

ஒவ்வொரு வங்கிக்கும் குறிப்பிடப்பட்ட அளவிலான கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த அளவில் மட்டுமே பணம் எடுக்க முடியும்

பரிவர்த்தனைகள் ஏராளமாக நடக்கும். இதனால், பணம் எடுப்பதற்கு எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லை

* ஓவர்டிராஃப்ட் வசதி

 

(உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

சேமிப்புக் கணக்குக்கு இல்லை

நடப்பு கணக்குக்கு உள்ளது

வங்கிக் கணக்கு புத்தகம் (Passbook)

சேமிப்பு அக்கவுண்டுக்கு பாஸ்புக் உண்டு

நடப்பு அக்கவுண்டுக்கு பாஸ்புக் இல்லை

குறைந்தபட்ச இருப்புத் தொகை

சேமிப்பு அக்கவுண்டுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகைக் குறைவாக இருக்கும். இது வங்கிக்கு தகுந்தாற்போல மாறுபடும். உதாரணமாக, ரூ. 500 & ரூ. 1000 என்ற தொகையாக இருக்கும்

நடப்பு அக்கவுண்டு வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையே அதிகமாக இருக்கும். உதாரணமாக ரூ.10,000 குறைந்தபட்ச தொகையாக இருக்கலாம்

 

* ஓவர் டிராஃப்ட் வசதி

சேமிப்புக் கணக்கு: உதாரணமாக, சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1000 மட்டும் அக்கவுண்டில் வைத்துள்ளனர். ஆனால், ரூ. 2000 க்குச் செக் எழுதித் தருகின்றனர். செக்கில் குறிப்பிடப்பட்ட அளவை விட அக்கவுண்டில் குறைவான அளவிலான தொகையே இருப்பதால், அந்த செக் பௌன்ஸ் ஆகி விடும். வங்கி கணக்கிலிருந்து தொகையை எடுக்க முடியாது.

நடப்புக் கணக்கு: இந்த வகை கணக்கிற்கு ஓவர் டிராஃப்ட் வசதி உண்டு. உதாரணமாக, ஒருவர் நடப்பு கணக்கில் ரூ.1,000 வைத்துள்ளார். ஆனால், ரூ. 2,000க்குச் செக் எழுதித் தருகிறார். இந்த சமயத்தில், அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியே அவருக்கு ரூ. 2000 பணத்தைச் சேர்த்துக் கொடுக்கும்.

மேற்கூறியவை அனைத்தும், இந்த இரு அக்கவுண்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்