Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Fill Challan Form in Bank: பேங்கில் சலான் ஃபில் பண்ண பயமா..? இந்த ஈஸியான முறையில பண்ணுங்க.....

Gowthami Subramani May 25, 2022 & 15:55 [IST]
How to Fill Challan Form in Bank: பேங்கில் சலான் ஃபில் பண்ண பயமா..? இந்த ஈஸியான முறையில பண்ணுங்க.....Representative Image.

How to Fill Challan Form in Bank: இன்றைய காலகட்டத்தில், அனைவரும் வங்கி கணக்குகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பணப் பரிவர்த்தனைக்காக பல்வேறு பயன்பாடுகள் இருந்த போதிலும், வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் பெறுவது என்பது நாள்தோறும் நிகழக்கூடியவைகளில் ஒன்றாகும் (Indian Bank Challan Form Download).

பணப் பரிவர்த்தனை கருவிகள்

சிலருக்கு வங்கிக்குச் சென்று பணப் பரிவர்த்தனை செய்வதற்கு (பணம் செலுத்துவது மற்றும் போடுவது) பயந்து கொண்டு வங்கிக்குச் செல்ல தயங்குவர். அக்கவுண்டிலிருந்து பணம் எடுப்பதற்கும், அக்கவுண்டில் பணத்தை செலுத்துவதற்கும் கருவிகள் உள்ளன. பணம் எடுப்பதற்கு ஏடிஎம் உபயோகப்படுத்தப்படும். இது பெரும்பாலும் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பணத்தை செலுத்துவதற்கான கருவி பெரும்பாலான சமயங்களில் பிரச்சனை ஆகி விடும் (How To Fill Indian Bank Challan Form).

சலான் உபயோகித்தல்

இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் சமயத்தில், பயனாளர்கள் சலான் உபயோகித்துப் பணத்தை வங்கி அக்கவுண்டில் செலுத்துவர். ஆனால் சலான் நிரப்புவதில் ஒரு சில பேருக்கு தயக்கமும், குழப்பமும் இருக்கிறது. இதில், சலானை எவ்வாறு நிரப்பி பணத்தைச் செலுத்தலாம் என்று பார்க்கலாம் (How To Fill Challan Form in Tamil).

சலான் பூர்த்தி செய்யும் முறை (How to Fill Challan Form in Bank)

வங்கிக்கு உள்ளே சென்ற பின், அங்கே பணம் செலுத்துவதற்கும், பணம் எடுப்பதற்கும் தனித்தனியே ஃபார்ம்கள் இருக்கும். பெரும்பாலும், SBI (SBI Deposit Form Fill Up 2022), Indian Bank, Indian Overseas Bank, Canara Bank போன்ற அனைத்து வங்கிகளிலும், பணம் செலுத்துவதற்கான படிவம் ஒரே மாதிரியாக இருக்கும் (SBI Deposit Slip Fillable).

பணம் செலுத்துவதற்கான படிவம்

இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி, உங்களது வங்கிக் கணக்கிலும் அல்லது வேறு ஒருவருடைய வங்கிக் கணக்கிலோ செலுத்திக் கொள்ளலாம் (SBI Deposit Form PDF Download).

  • Deposit / Pay in Slip -ஐ எடுத்துக் கொள்ளவும்.
  • அதில், Branch-ல் உங்களது கிராமத்தின் பெயரை எழுத வேண்டும். ஊர் பெயரையும், நீங்கள் இருக்கும் பகுதியின் பெயரையும் எழுத வேண்டும்.
  • தேதிக்கட்டத்தில், நீங்கள் எந்த தேதியில், அந்த படிவத்தை வங்கியில் செலுத்துகிறீர்களோ அந்தத் தேதியை எழுத வேண்டும் (South Indian Bank Challan Form Download).
  • அந்தப் படிவத்தில் பெரிய பகுதி மற்றும் சிறிய பகுதி என இரண்டு பகுதிகள் இருக்கும். அதன் இரு பக்கங்களிலும், ஒரே மாதிரியாக Branch Name மற்றும் தேதியை நிரப்ப வேண்டும்.
  • பேங்க் பாஸ்புக்-ல் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நிரப்ப வேண்டும். அதில், நீங்கள் எந்த அக்கவுண்டில் பணம் செலுத்த விரும்புகிறீர்களோ அந்த அக்கவுண்டுக்கான எண்ணை நிரப்ப வேண்டும்.
  • வங்கி கணக்கின் எண்ணை எழுதும் போது, அதில் உள்ள ஒவ்வொரு கட்டத்தையும் நிரப்ப வேண்டும். நிரப்பிய பின், எக்ஸ்ட்ராவாக இருக்கும் கட்டத்தில் சிறிய கோடு (-) இட வேண்டும்.
  • பின், பெயர் மற்றும் தொலைபேசி எண் இருக்கும் இடத்தில் யாருடைய அக்கவுண்டுக்கு பணம் செலுத்துவோமோ அவர்களுடைய தகவலை எழுத வேண்டும்.
  • மின்னஞ்சல் ஐடியை நிரப்ப வேண்டிய அவசியமில்லை
  • பின், ரொக்கம் என்ற இடத்தில், எவ்வளவு தொகையை வங்கியில் செலுத்துகிறோமோ அந்த தொகையை நிரப்ப வேண்டும் (South Indian Bank Cheque Deposit Slip).
  • உதாரணமாக, ரூ. 2000 வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றால், அதில், உள்ள கட்டத்தில் ரூ. அல்லது Rs. என்ற இடத்தில் 2,000 என குறிப்பிட வேண்டும். மேலும், இதற்கான இன்னொரு கட்டத்தில் எழுத்தால் என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில், இரண்டாயிரம் ரூபாய் மட்டும் என எழுத வேண்டும். இதை ஆங்கிலத்தில் நிரப்பும் போது Two Thousand Rupees Only என்று எழுத வேண்டும்.
  • பின் அதில், Cash Deposit-ஐ நிரப்பும் முறையைக் காண்போம் (How to Fill Deposit Slip). கேஷ் டெபாசிட்டில், நீங்கள் எவ்வளவு தொகை வைத்துள்ளீர்களோ அந்தத் தொகையை எண்ணிக்கையாக எழுத வேண்டும் (How to Fill Cheque Deposit Slip Indian Bank).
  • உதாரணமாக, ரூ. 2000 செலுத்துவதற்கு 500 ரூபாய் நோட்டுகள் 4 உள்ளதெனில், அந்த எண்ணில் 4 என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • அதில், மொத்தம் என்பதில் நீங்கள் மொத்தமாக செலுத்தும் தொகையை எழுத வேண்டும். அதில் எழுதாத இடத்தில் அடித்து விட வேண்டும் (/).
  • சீட்டின் பெரிய பகுதியில் செலுத்துபவரின் கையொப்பத்தை நிரப்ப வேண்டும் (Bank Challan Filling in Tamil).
  • இதில், 50,000 க்கும் அதிகமாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துபவர்கள் பேன் எண்ணை நிரப்ப வேண்டும். 50,000-க்கும் குறைவாக பணம் செலுத்துபவர் பேன் எண்ணை நிரப்ப தேவையில்லை.

மேற்கண்ட முறைகளின் மூலம், வங்கிக்கணக்குகளில் சலான் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்