Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

13,000க்கும் அதிகமான சான்றிதழ்கள் ஒரே வெப்சைட்டில்..!| How to Use NGS Portal to Get Certificate

Gowthami Subramani Updated:
13,000க்கும் அதிகமான சான்றிதழ்கள் ஒரே வெப்சைட்டில்..!| How to Use NGS Portal to Get CertificateRepresentative Image.

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே இன்டர்நெட் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. கிராமத்தின் நடுவே உள்ள சிறிய பெட்டிக் கடை முதல், நகரத்தில் உள்ள பெரிய மால் வரை ஆன்லைனில் இயங்கி வருகின்றன. இந்த பிஸியான சூழலில், மக்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு சில சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பிடப்பட்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழலில் உள்ளனர்.

சிறிது காலத்திற்கு முன்னர் பார்க்கும் போது, பெரும்பாலும் மக்கள் சான்றிதழ்கள் பெறவோ அல்லது அதற்காக மேலதிகாரிகளிடம் கையெழுத்து பெறவோ எவ்வளவோ நேரம் காத்துக் கொண்டிருக்கும் காலமாக இருந்தது. எனவே, அத்தகைய சூழலில் அவர்களுடைய வேலை நேரமும் பாதிப்புக்கு உள்ளானதாக அமைகிறது.

எனவே, பயனர்களுக்கு ஏற்றாற்போல தற்போது சில துறைகள், அவர்களது அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் சென்று அதன் கீழ் உள்ள சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இருப்பினும், சில பேருக்கு இதன் அனைத்துத் தகவல்களும் தெரிந்திருக்க இயலாத நிலையே இருக்கிறது. இதனால், மத்திய அரசானது பயனர்களுக்கு உதவக்கூடிய வகையில் ஒரு சிறப்பான அம்சம் ஒன்றைத் தந்துள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுக்குத் தேவையான எந்த சான்றிதழ்களாக இருந்தாலும், அதனை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு சிறப்பான வசதியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளமான National Government Services Portal மூலம், 13,000-ற்கும் அதிகமான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதன் படி, இந்த ஒரு போர்ட்டலின் மூலம் பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13,000-க்கும் அதிகமான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NGS போர்ட்டலில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் NGS போர்ட்டலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், search option-ல் உள்ள Advanced search scroll bar-ஐக் க்ளிக் செய்யவும்.

பின், அந்த Option-ல் உங்களுக்கு எந்த சர்வீஸின் கீழ் சான்றிதழ் வேண்டுமோ அதனைக் க்ளிக் செய்ய வேண்டும். உதாரணமாக, பிறப்பு சான்றிதழ் வேண்டுமெனில் அந்த ஆப்ஷனில் Births, Deaths, Marriages and Child care என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு, Location-ல் State/ District அல்லது Pin code ஆப்ஷனைப் பயன்படுத்தி, உங்களுடைய மாநிலம்/மாவட்டத்தின் பெயர், அல்லது Pin code எண்ணை பதிவிட்டு, search-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, உங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்