Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வங்கியில் பணம் எடுக்கவும் ஜிஎஸ்டி இருக்கா..? நிர்மலா சீதாராமனின் அதிரடி பதில்..!

Gowthami Subramani August 03, 2022 & 13:25 [IST]
வங்கியில் பணம் எடுக்கவும் ஜிஎஸ்டி இருக்கா..? நிர்மலா சீதாராமனின் அதிரடி பதில்..! Representative Image.

சமீபத்தில் வங்கியில் பணம் எடுக்க ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த தகவல் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் நிர்மலா சீதாராமன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி அறிமுகம்

கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே ஜிஎஸ்டி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும், ஜிஎஸ்டி விதிப்பு அமலில் இருந்து வருகிறது. தற்போது, ஆண்டு தோறும் ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் அந்த ஆண்டிற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்த விவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதன் படி, அன்றாட தேவையில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் உயர்ந்தும், தாழ்ந்தும் வருகிறது.

வங்கியில் பணம் எடுக்க ஜிஎஸ்டி பிடிக்கப்படுமா?

கடைசியாக நடந்த ஜிஎஸ்டி மீட்டிங்கில் வெளியிட்ட அறிக்கையின் படி, வங்கியில் காசோலை புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிகழ்வை வைத்து, வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கு ஜிஎஸ்டி இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


 அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி….! இதுக்கெல்லாம் கண்டிப்பா   ஜிஎஸ்டி உண்டு…!


இதற்கு ஜிஎஸ்டி இல்லை

வங்கியில் பணம் எடுப்பதற்கு போடப்பட்டிருந்த ஜிஎஸ்டி குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, ஜிஎஸ்டி குறித்த தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்று கூறினார். மேலும், ஜிஎஸ்டி வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்குக் கிடையாது. வங்கிகள் பிரிண்டிங் நிறுவனங்களிடம் இருந்து பெறும் காசோலை புத்தகங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் செலுத்துவதற்கும், வங்கியில் இருந்து பணம் எடுத்தாலும், அதற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை எனத் தெளிவாக கூறினார்.

சுடுகாட்டிற்கும் ஜிஎஸ்டி இல்லை?

வங்கி காசோலைக்கு ஜிஎஸ்டி என தகவல் பரவியது போல, சுடுகாட்டுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதற்கும் விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை. புதிதாக சுடுகாடு அமைப்பதற்கான ஒப்பந்த பணிகளுக்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

ஜிஎஸ்டி-க்கான காரணம்

வங்கி காசோலை, சுடுகாடு ஒப்பந்த பணிகள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்குக் காரணம் நாட்டில் சில்லறை பணவீக்கம் 7% ஆக இருப்பதே ஆகும். இதனைக் கட்டுப்படுத்தவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்