Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டணத்திற்கு இது சரியான நேரம் இல்ல… நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Gowthami Subramani August 27, 2022 & 12:40 [IST]
டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டணத்திற்கு இது சரியான நேரம் இல்ல… நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!Representative Image.

சில நாள்களுக்கு முன்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த கருத்துக்களை மக்களிடமிருந்து பெறப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. பின்னர், எந்த கட்டணமும் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவலின் படி, டிஜிட்டல் கட்டணம் பொதுவான நன்மையாகப் பார்ப்பதாகவும், மக்கள் அதனை சுதந்திரமாக அணுக முடியும் எனக் கூறியுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டணம்

ஆர்பிஐ அறிவித்த பகீர் அறிவிப்பால், பெரும்பாலானோர் அதிர்ச்சியில் இருந்தனர். அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, யுபிஐ உள்ளிட்டவைகளுக்கு கட்டனம் வசூலிக்கப்படுவதற்கான கருத்துகள், மக்களிடமிருந்து பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இருந்தபோதிலும், அதை அறிவித்த சில நாள்களிலேய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தது.

நிதியமைச்சரின் அறிவிப்பு

இது குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பின் படி, கட்டணம் வசூலிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல எனக் கூறியுள்ளார். மேலும், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல், சிறந்த அணுகலை செயல்படுத்தக் கூடிய தளங்களைச் செயல்படுத்த உந்துவதாகவும், யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அடுக்குக் கட்டணங்கள் விதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் கூறினார். இருந்த போதிலும், UPI சேவைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் கவனமாகவும், நடைமுறை அல்லது வருவாய் தொடர்பாக வரும் சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு எளிதாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

நியாயமான கட்டணம்

இவ்வாறு கட்டணச் சேவைகளுக்கான கட்டணங்கள் பயனர்களுக்கு நியாயமானதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், இன்டர்மீடியர்களுக்கு உகந்த வருவாயை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். இந்த சமநிலையை உறுதிபடுத்த, பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் பற்றிய விரிவான மதிப்பாய்வு மேற்கொள்வது பயனுள்ளதாகும் எனக் கூறினார்.

RBI மற்றும் NPCI

இந்தியாவில், IMPS, RuPay, UPI போன்ற அமைப்புகள், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திற்கு (NPCI) சொந்தமான வங்கிகளால் வழங்கப்படும் இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும்.

மேலும், RTGS மற்றும் NEFT உள்ளிட்ட கட்டண முறைகள் RBI-க்குச் சொந்தமானதாகும். மற்றும் RBI மூலமாகவே இவைகள் இயக்கப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயனர்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி, NPCI வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, UPI 6.28 பில்லியன் பரிவர்த்தனைகள் ரூ.10.62 டிரில்லியன் என அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

UPI Transaction Charges HDFC | UPI Payment Charges from Jan 2022 | UPI Charges Phonepe | UPI Transaction Charges on google Pay | Bhim UPI Transaction Charges | Paytm UPI Charges | UPI Transaction Charges from 2022 | RBI Guidelines for UPI Transaction Charges | Nirmala Sitharaman Speech about Digital Payments | RBI | UPI | ReServe Bank of India | MDR | Digital Payments | Unified Payments Interface | IMPS | Online Transactions | Payment Service Providers | Charges for Digital Payments | Charges for Gpay Transaction | Fees for Digital Transaction | Reserve Bank of India


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்