Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

38,000-க்கும் கீழ் குறைந்த தங்கத்தின் விலை... குஷியில் நகைப் பிரியர்கள்….

Gowthami Subramani October 11, 2022 & 10:30 [IST]
38,000-க்கும் கீழ் குறைந்த தங்கத்தின் விலை... குஷியில் நகைப் பிரியர்கள்….Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. தங்கத்தின் விலை நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தில் இறக்கத்தை விட ஏற்றமே அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்றும், அதனைத் தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி, இனி வரக்கூடிய காலாண்டுகளில் வட்டி விகிதத்திய உயர்த்துவதன் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு குறையக் கூடும். இதன் காரணமாக தங்கம் விலை ஏற்றம் மிகப் பெரிய அளவில் இருக்காது.

இருப்பினும், பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவில் இருந்து வருகிறது. இதனால், தங்கத்தை இறக்குமதி செய்ய, அதிக செலவு ஏற்படுகிறது. மேலும், மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை குறைப்பதற்காக, அதற்கான வரியை 15% வரை உயர்த்தியுள்ளது. இதனால், இந்தியாவில் எப்போதும் தங்கத்தின் விலை அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 11 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.35 குறைந்து, 4,740 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து 37,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையுடன், இன்று வெள்ளி விலையும் சரிந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 காசுகள் குறைந்து, ரூ.64 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளி விலை தற்போது கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.64,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை