Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யம்மாடியோ.. 10 நாளைக்கு அப்றம் இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…!

Gowthami Subramani October 07, 2022 & 10:40 [IST]
யம்மாடியோ.. 10 நாளைக்கு அப்றம் இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து 10 நாள்களுக்குப் பின் இன்று தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே, அதிகரித்து கொண்டே வந்தது. அதாவது கடந்த 10 நாள்களில், தங்கத்தின் விலை சுமார் 1700 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து காணப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவைக் கண்டு வருவதால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு 10 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 7 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 குறைந்து, 4,835 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 குறைந்து 38,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்த போதிலும், வெள்ளி விலை மாறாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, ஒரு கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்து, ரூ.67.00 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும், ரிசர்வ் வங்கி உயர்த்திய வட்டி விகிதத்தாலும், தங்கத்தின் விலை உயரலாம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு தங்கத்தின் மீதான முதலீடு குறையும் என்றும், விலை அதிகரிக்காது எனவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை