Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு தாராளமா தங்கம் வாங்கலாம்… சவரனுக்கு 160 ரூபாய் குறைஞ்சிடுச்சி…!

Gowthami Subramani October 27, 2022 & 11:40 [IST]
இன்னைக்கு தாராளமா தங்கம் வாங்கலாம்… சவரனுக்கு 160 ரூபாய் குறைஞ்சிடுச்சி…!Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாள்களாக ஒரே விலையில் நீடித்த நிலையில், நேற்று உயர்ந்தது. இதனால், இல்லத்தரசிகள் சற்று பதற்றத்தில் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. தீபாவளி முடிந்த பிறகு தங்கத்தின் விலை உயர்ந்ததால், எல்லோரும் கவலையில் இருந்தனர். இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 27 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.20 குறைந்து 4,745 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,147 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.41,176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து ரூ.63.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை