Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

GST Collection July 2022 : இரண்டாவது Highest வசூல்.. ஜூலை மாத ஜிஎஸ்டியில்.. தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா?

Sekar August 01, 2022 & 13:15 [IST]
GST Collection July 2022 : இரண்டாவது Highest வசூல்.. ஜூலை மாத ஜிஎஸ்டியில்.. தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா?Representative Image.

GST Collection July 2022 : இந்தியாவில் பொருளாதார மீட்சி மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 28% உயர்ந்து ர்.1.49 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு இதே காலகட்டமான ஜூலை, 2021 இல், ஜிஎஸ்டி வசூல் ரூ.1,16,393 கோடியாக இருந்தது.

ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது ஜூலை 2022இல் வசூலான ஜிஎஸ்டி வரி இரண்டாவது அதிகபட்ச தொகையாகும்.

முன்னதாக ஏப்ரல் 2022 இல் உச்சபட்ச சாதனையாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் ரோ.6,302 கோடியாக இருந்த நிலையில், அது இந்த ஆண்டு ஜூலையில் 34% சதவீதம் உயர்ந்து ரூ.8,449 கோடியாக பதிவாகியுள்ளது. ஜூலை 2022இல் ஜிஎஸ்டி வசூலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் கர்நாடகாவும், மூன்றாம் இடத்தில் குஜராத்தும் உள்ள நிலையில், அதற்கடுத்து நான்காவதாக தமிழகம் உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்