Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How I Turn my Hobby into Business: கோலங்களில் மாதம் ரூ.75,000 வருமானம்…! ஹாபியை பிசினஸ் ஆக்கிய ஸ்ரீரங்கம் தீபிகா..!

Gowthami Subramani July 10, 2022 & 17:45 [IST]
How I Turn my Hobby into Business: கோலங்களில் மாதம் ரூ.75,000 வருமானம்…! ஹாபியை பிசினஸ் ஆக்கிய ஸ்ரீரங்கம் தீபிகா..!Representative Image.

How I Turn my Hobby into Business: நாம் ஏராளக்கணக்கான நபர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறி வருவதைப் பார்த்து வருகிறோம். சில பேர் பிசினஸ் செய்வதற்கான வழியைத் தேடிக் கொண்டிருப்பர். இன்னும் ஒரு சிலர் தனக்குத் தெரிந்தவற்றை வைத்து தொழில் செய்து சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹாபியை பிசினஸாக மாற்றுவது

வேலைக்குச் செல்வதை விட சொந்தத் தொழில் செய்வதையே பல பேர் விரும்புகின்றனர். இவ்வாறு ஒருவர் அவரது தொழிலையும், பார்க்க வேண்டும். அதே சமயம், யாரையும் சார்ந்திருத்தல் கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். தற்போது பெரும்பாலானோர், புதுபுது விதமாக தொழில்களைச் செய்து வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் ஒருவர் தனது ஹாபியை வைத்து பிசினஸ் செய்து வருமானத்தை ஈட்டியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தினைச் சேர்ந்த தீபிகா

ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தீபிகா வேல்முருகன் என்பவர் Home2Cherish என்ற பிராண்டின் மூலம், வணிகம் செய்து வருகிறார். இவர் தனது திறமையின் மூலம், கைவினைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பொதுவாக, அழகு சாதனப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவைகளில் பெண்களுக்கு பிரியம் அதிகம் இருக்கும். பெரும்பாலானோர், இந்த கலைப்பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவைகளின் மூலம் வணிகம் செய்து லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வருகின்றனர்.

கோலத்தின் மூலம் வருமானம்

கோயம்புத்தூரில் வளர்ந்த தீபிகா அவர்கள், தனது தாயார் கூட இருந்த போது, அவர் அரிசி மாவு கோலம் போடுவதை கவனித்து வந்தார். தாயார் போட்ட அந்த கோலம், சிக்கலான வடிவமைப்பைக் கொண்டதுடன், மிக அழகானதாகவும் இருந்துள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாக தாயாரின் கோலத்தினை நன்கு கவனித்து வந்தார்.

முதலில் இன்ஸ்டாகிராமில்

தீபிகா கோலத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இவர் ஆரம்பத்தில் வீட்டில் உள்ள பொருள்களில் வரைந்து அதனை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த திறமைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைக் கண்ட பலர், தங்களுக்கும் இது போன்று வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன் பிறகு தொழிலாகச் செய்யத் தொடங்கியுள்ளார். பின்னர், வணிகமாகப் பார்த்து தொடங்கியுள்ளார்.

மாத வருமானம் இவ்வளவா?

இவ்வாறு மரத்தாலான அழகான பொருள்களை வடிவமைத்து அதனை விற்பனை செய்து மாதந்தோறும் சுமார் 75,000 ரூபாய் வருமானத்தை ஈட்டி வருகிறார். இது மட்டுமல்லாமல், ஆடைகள் வடிவமைப்பிலும் சிறந்து விளங்கியவராய் இருந்தார். மேலும், திருப்பூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துத் தர தொடங்கினார். அதனைத் தொடர்ந்து திருமணத்தின் காரணமாக இவர் ஸ்ரீ ரங்கம் சென்றார். திருமணத்திற்குப் பிறகு இவரால், வடிவமைப்புப் பணியைத் தொடர முடியவில்லை.

ஹாபி டூ பிசினஸ் எப்படி?

இவருக்கு வீட்டில் பொழுதுபோக்காக வீட்டில் இருந்த அலங்காரப் பொருள்களில் கோலம் வரையத் தொடங்கினார். இதனையும் இன்ஸ்டக்ராமில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த கலைத்திறமைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு பாரம்பரிய முறையிலேயே வெற்றிகரமான வணிகத்தைத் தொடங்கினார்.

ஹோம்2செரிஷ்

கடந்த 2019 ஆம் ஆண்டு, இவர் ஹோம்2செரிஷ் என்ற பிராண்டை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், மரத்தாலான பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நிறைய கைவினைப் பொருள்களைத் தயாரித்து அலங்கரித்து விற்கத் தொடங்கினார். இந்த பாரம்பரிய முறைகளின் மூலம் தயாரிக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் வாங்கத் தொடங்கினர். மேலும், இவர் பூஜை அறைகளில் வைத்து வழிபடும் விதமாக பல்வேறு வகையான அளவுகளில் பொருள்களை வடிவமைத்து தந்து வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்