Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலையில்லாதவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகை திட்டம்..!

Gowthami Subramani [IST]
வேலையில்லாதவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகை திட்டம்..! Representative Image.

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு அரசுத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதே போல, வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆண், பெண் அனைவரும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண் அனைவரும் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்தத் திட்டத்தில் சேர்வதற்குத் தேவையான விவரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை திட்டம் எப்படி பெறுவது?

விண்ணப்பிப்பதற்கான தகுதி

வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி அடையாத நபர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்குச் சமமான பட்டயப் படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மேலும், இளங்கலை / முதுகலை பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்.

இருந்தபோதிலும், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியாது.

வேலைவாய்ப்புப் பதிவுதாரர்களுக்கான உதவித் தொகை விவரங்கள்

தகுதி

உதவித்தொகை / மாதம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்

ரூ.200/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

ரூ.300/-

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு

ரூ.400/-

பட்டதாரி / முதுலைப் பட்டதாரிகளுக்கு

ரூ.600/-

 

வயது வரம்பு

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினர்கள் கண்டிப்பாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மற்ற பிரிவினர்கள், அதிகபட்ச வயதாக 45 வயதைக் கொண்டிருக்கலாம்.

ஆண்டு வருமானம் பெற்றிருப்பதற்கான வரம்பு

வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமானம்

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு அதிகமாக இருக்கக்கூடாது. ரூ.50,000-க்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் நபர்கள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கக் கூடாது.

பதிவு செய்திருப்பதற்கான முக்கிய தகுதி

வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை பெற வேண்டிய நபர்கள் தகுதி வாய்ந்த நபர்கள் Employment Office-ல் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது

விண்ணப்பதாரர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பெற்ற பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், விண்ணப்பங்களில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற வேண்டும்.

அதன் பின்னர், விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு

விண்ணப்பதாரர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முழுமையாக தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், அரசு அல்லது தனியார் துறையில் ஏதேனும் ஊதியம் பெறும் பணியில் இருப்பவராகவோ, அல்லது சுய தொழிலில் ஈடுபட்டவராகவோ இருக்கக் கூடாது.

இந்த உதவித் தொகை திட்டத்தின் கீழ் இணைபவர்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பு பதிவுத் துறையில் தொடர்ந்து புதுப்பித்தல் வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் துறைகளிடம் இருந்து வேறு எந்த வகையிலுமே உதவி தொகை பெறுபவராக இருக்கக்கூடாது.

உதவித்தொகை பெறுவதன் காரணமாக, தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.

இவ்வாறு, அரசு வழங்கும் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Get Unemployment Allowance in Tamilnadu | How to Get Unemployment Allowance in Tamilnadu in Tamil | Tamil Nadu Unemployment Allowance | Unemployment Allowance online registration | Unemployment scholarship form in Tamilnadu 2022 | Unemployment Certificate Tamilnadu | Employment schemes in Tamilnadu in tamil | How to apply Unemployment scholarship in Tamilnadu online | Unemployment Assistance Scheme for Unemployed youth | Unemployment Scholarship Form in Tamilnadu 2022 | Employment Schemes in Tamilnadu in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்