Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு வழங்கும் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை… தகுதி, எப்படி பெறுவது உள்ளிட்ட முழு விவரங்களுடன்…

Gowthami Subramani [IST]
அரசு வழங்கும் கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை… தகுதி, எப்படி பெறுவது உள்ளிட்ட முழு விவரங்களுடன்…Representative Image.

Tamilnadu Pregnancy Scheme 2022 in Tamil: மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள்

பெண் குழந்தை பிறப்பது முதல் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பைத் தொடர்ந்து, திருமணத்தின் போது, மகப்பேறு அடையும் போது உள்ளிட்ட ஏராளக்கணக்கான நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை வழங்குதல் திட்டத்தின் அடிப்படையில், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தப் பதிவில், கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் பெறும் முறைகளையும், இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் இன்னும் சில பல்வேறு முக்கிய விவரங்களைப் பற்றியும் இதில் காண்போம்.

தமிழ்நாடு அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கான டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து கிட் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

தவணை / Kind Benefit

நிபந்தனை

தொகை

முதல் தவணை

12 வாரங்களில் அல்லது அதற்கு முன் பிறப்புக்கான முந்தைய பதிவு

ரூ.2,000

Kind Benefit

மூன்றாம் மாதம் நிறைவு (Kind Benefit)

ரூ.2,000

இரண்டாம் தவணை

4 மாதங்களுப் பின்

ரூ.2,000

Kind Benefit

இரண்டாவது ஊட்டச்சத்துக்கான Kit

ரூ.2,000

மூன்றாம் தவணை

பிரசவத்திற்குப் பிறகு

ரூ.4,000

நான்காம் தவணை

IPV இன் 2 டோஸ்கள் மற்றும் OPV/Rota/Penta valent இன் அனைத்து 3வது டோஸ்கள் முடிந்த பிறகு

ரூ.4,000

ஐந்தாவது தவணை

குழந்தைகளுக்கு 9 ஆவது மற்றும் 12 ஆவது மாதத்திற்குள் போடும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முடிந்த பிறகு

ரூ.2,000

மொத்தம்

ரூ.18,000

 

கர்ப்பிணி பெண்கள் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி

டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு நன்மை திட்டத்திற்குத் தகுதி பெற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கர்ப்பிணி பெண் கட்டாயம் 19 வயதை பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தாய், இரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே மேலே கூறப்பட்ட அனைத்து 5 தவணைகளையும் பெறுவார்.

நடைமுறை

இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு கர்ப்பிணித் தாய் தனது கர்ப்பத்தை 12 வாரங்களுக்கு முன்பு VHN / UHN உடன் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம்

உங்கள் ஊரில் உள்ள கிராம சுகாதார செவிலியர் அல்லது நகர்ப்புற சுகாதார செவிலியர் (அல்லது) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் / ஆரம்ப சுகாதார நிலையம்

பயனடையும் நபர்கள்

மகப்பேறு அடைந்த ஏழை எளிய பெண்கள் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்