Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Increase My CIBIL Score: சிபி ஸ்கோரை எப்படி உயர்த்துவது..? சிபில் ஸ்கோர் பற்றிய முக்கியத் தகவல்கள்....!

Gowthami Subramani June 21, 2022 & 16:15 [IST]
How to Increase My CIBIL Score: சிபி ஸ்கோரை எப்படி உயர்த்துவது..? சிபில் ஸ்கோர் பற்றிய முக்கியத் தகவல்கள்....!Representative Image.

How to Increase CIBIL Score: சிபில் ஸ்கோர் என்பது ஒருவர் வங்கிகளிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்குவதில் குறிப்பிடுவதாகும். அதன் படி, ஒருவர் பெற்றிருக்கக்கூடிய கடன் தொகை பற்றிய விவரங்களைச் சேமித்து வைப்பதாகும்.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தொகை எவ்வளவு, அவர் கடனை எவ்வாறு செலுத்தியுள்ளார் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொண்டதாகும். அதன் படி, கிரெடிட் ஸ்கோர் பெருபாலும் கடன் அறிக்கையை வைத்து தீர்மானிக்கப்படுகிறது (How to Increase My CIBIL Score in Tamil).

நுகர்வோர்கள் கடன் பெறும் போது, அவர்களின் சிபில் ஸ்கோர் அளவினைச் சரிபார்த்தே கடன் வழங்கப்படும். கடன் பெறுவதற்கான தகுதி, வட்டி விகிதம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய கடன் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் படி, எந்த நபர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதை மதிப்பிடுவதற்கும் கடன் வழங்குபவர்களால் பயன்படுத்தப்படுவது கிரெடிட் ஸ்கோர்கள் ஆகும் (How to Increase CIBIL Score in Tamil).

நல்ல சிபில் ஸ்கோர்

நல்ல சிபில் ஸ்கோரைப் பெற்றிருப்பதன் மூலம், நாம் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளும் மேம்படும். சிபில் கிரெடிட் ஸ்கோர் மூலம் ஒரு நபரின் கடன் தொகை மற்றும் அந்த மதிப்பீட்டின் சுருக்கத்தை வழங்கக் கூடிய மூன்று இலக்க எண்ணாகும் (CIBIL Score Increase Process).

சிபில் மதிப்பெண்ணை 600-லிருந்து 750 ஆக எவ்வாறு அதிகரிக்கலாம் (How to Increase CIBIL Score From 600 to 750 in Tamil)

கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க பல்வேறு முறைகளை பயன்படுத்தலாம். இதில், சிபில் மதிப்பெண் 600-லிருந்து 750 ஆக உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் காணலாம் (How to Improve CIBIL Score Immediately).

புதிய கடன் அட்டைகள்

கிரெடிட் கார்டுகளைப் பெற விண்ணப்பிக்கும் நபர்கள் கவனமாக இருப்பது அவசியம். அதே போல, அதிகப்படியான கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதும், அதிக மதிப்புள்ள கொள்முதல் செய்வதும் ஆபத்தை விளைவிக்கும். மேலும், கிரெடிட் கார்டு விண்ணப்பிக்கும் போதே, கடன் பெறுவதற்கான தகுதி உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி செலவிடுவது மட்டுமல்ல…. பல வங்கிகளில் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதும் சிபில் ஸ்கோரை பாதிக்கக் கூடியதாக அமையும்.

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் (How to Check CIBIL Score in Tamil)

கிரெடிட் கார்டு ஸ்கோரை மேம்படுத்த நிலுவையில் உள்ள கிரெடிட் பில்களை செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு அறிக்கையில் தோன்றக்கூடிய அடிப்படைத் தொகையை மட்டுமாவது கட்ட முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் தாமதமான கட்டணத்தை செலுத்துவதிலிருந்து விடுபடும். அதன் படி, குறைந்தபட்ச தொகையானது சுழற்சி முறையில் இயங்கக் கூடிய பில்லிங் தொகையில் தோராயமாக 5% ஆகும். இருந்தபோதிலும், அதற்கான அடுத்த சுழற்சியில் வட்டி  மற்றும் வரி என சேர்க்கப்படும். இதனால், கடன் மிக அதிக அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது (CIBIL Score Tamil).

கடன் பயன்பாட்டின் வரம்பு

கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கான வரம்பில் 30% ஐ விட குறைவாகப் பயன்படுத்துவது சிபில் ஸ்கோருக்கு விளைவை ஏற்படுத்தாது. இருந்த போதிலும், கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருக்கும் போதும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும் (How to Increase CIBIL Score Online). இதனால், பயன்படுத்தாமலும் இருக்க வேண்டாம் அதே போல் 20% அதிகமாகப் பயன்படுத்தவும் வேண்டாம். இவ்வாறு இதனை நடுநிலைமையில் வைப்பதன் மூலம் சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருக்க முடியும்.

கடன் அறிக்கையை சரிபார்த்தல் (How to Increase My CIBIL Score in India)

Credit Bureaus கடன் வாங்குபவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு கிரெடிட் அறிக்கையை இலவசமாக வழங்க சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஆன்லைன் சந்தைகளும் கடன் வரலாற்றைக் கண்காணிக்கக்கூடிய செயல்முறையை எளிதாக்கியுள்ளது. ஒருவரது கணக்கில் பிழைகள் ஏராளம் இருக்கலாம். இவ்வாறு பிழைகள் இருப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். இதனால், தவறான தகவல், புதுப்பித்தலில் தாமதம் அல்லது முக்கிய விவரங்களைப் புதுப்பித்தலை தாமதமாகச் செய்தல் போன்றவை அறிக்கையில் இருப்பின் அதனை புகாரளித்து சரிசெய்ய வேண்டும்.

பழைய கடனை அறிக்கையில் வைத்திருக்க வேண்டும் (How to Improve CIBIL Score Tamil)

கிரெடிட் ஸ்கோர் மூலம், கடந்த காலத்தில் கிரெடிட் செய்த தொகை அறிக்கையின் பிரதிபலிப்பாகும். இதன் அடிப்படையில், கடன் வழங்குபவர்கள், கடன் தொகைக்கான விண்ணப்பத்தை அங்கீகரிப்பர்.

அதன் படி, பழைய கடன் தொகையின் கணக்குப் பதிவுகளை வைத்திருப்பது சிபில் ஸ்கோருக்கு நல்ல நடைமுறையாகும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் மேலும் கடன் வாங்குவதற்கான கடன் தகுதி அதிகரிக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்