Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Pension Scheme India: தினமும் 2ரூ போதும்….! 36,000 ரூபாய் பென்ஷன் தொகை வாங்கலாம்…! மத்திய அரசின் அமோக திட்டம்

Gowthami Subramani July 10, 2022 & 18:30 [IST]
New Pension Scheme India: தினமும் 2ரூ போதும்….! 36,000 ரூபாய் பென்ஷன் தொகை வாங்கலாம்…! மத்திய அரசின் அமோக திட்டம்Representative Image.

New Pension Scheme 2022: மத்திய அரசு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏராளக்கணக்கான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா என்ற அமைப்பு சாரா துறை ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் முழு விவரங்களையும், இத்திட்டத்தின் பயன் குறித்தும் இந்தப் பதிவில் காணலாம் (Government Schemes in Tamil).

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு சேவை செய்வதில் பெரும் பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது, தெருவோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாராத் துறையில் தொடர்புடையவர்கள் போன்றோர் தங்களின் வயதான காலங்களில் உதவுவதற்கே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது (New Pension Scheme India). தற்போதைய சேமிப்பு நாளைய வருமானம் என்ற சொல்லிற்கேற்பவே இந்த ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, தினமும் ரூ.2 சேமித்தால், ஆண்டுக்கு ரூ.36,000 பென்ஷன் தொகையைப் பெற முடியும் (New Pension Scheme 2022).

பென்ஷன் தொகை

இந்த திட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 55 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு சேமிப்பதன் மூலம் ஆண்டு தோறும் பென்ஷன் தொகையைப் பெறலாம். மேலும், ஒருவர் 18 வயது இருக்கும் போது, சேமிப்பு செய்யத் தொடங்கினால், ஒரு நாளைக்கு ரூ.2-ஐச் சேமிப்பதன் மூலம் ஆண்டு தோறும், ரூ.36,000 பென்ஷன் தொகையாக பெறலாம்.

அதே போல, 40 வயதில் ஒருவர் இந்தத் திட்டத்தைத் தொடங்கினால், ஒவ்வொரு மாதமும் ரூ.200 டெபாசிட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும், ரூ.3000 பென்ஷன் தொகையாகப் பெற முடியும் (New Government Pension Schemes).

சேமிப்புக்குத் தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை
  • இருப்பிடச் சான்றிதழ்
  • சேமிப்பு வங்கிக் கணக்கு

சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு பதிவு செய்வது எப்படி?

சேமிப்பு கணக்கு தொடங்க நினைக்கும் நபர்கள் முதலில் பொது சேவை மையத்தில் (சிஎஸ்சி) திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் படி, சிஎஸ்சி மையத்தில் உள்ள போர்ட்டலுக்குச் சென்று தொழிலாளர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இந்த சிறப்பான திட்டத்திற்கு அரசு ஒரு இணையதள போர்ட்டலை உருவாக்கி உள்ளது.

இந்த மையத்தில் சென்று சேமிப்பு தொடங்கும் நபர்கள் ஆன்லைனில் அனைத்து தகவல்களும் அரசுக்கு அனுப்பப்படும்.

திட்டத்தில் பயன்பெறும் நபர்கள்

40 வயதிற்குக் குறைவான வயதுடைய நபர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.

இதுவரை அரசாங்கத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் இதில் பயன் பெறலாம்.

மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய நபர்கள் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின், மேற்கூறியவாறு சேமிப்புத் தொகையைச் செலுத்துவதன் மூலம், மாதந்தோறும் பென்ஷன் தொகையைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

New Pension Scheme India  | New Pension Scheme 2022 | New Government Pension Schemes | Tamil Nadu Government Schemes List | List Central Government Schemes India | Central Government Schemes for Rural Areas | List of Central Government Offices in Tamilnadu | Schemes for Girl Child by Central Government | Total Central Government Schemes | What Are The Central Government Jobs in Tamilnadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்