Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

ஊனமுற்றோர் அல்லது உடல் குறைபாடு உடையவர்களுக்கான உதவித் தொகை திட்டம்..! எப்படி பெறுவது..?

Gowthami Subramani [IST]
ஊனமுற்றோர் அல்லது உடல் குறைபாடு உடையவர்களுக்கான உதவித் தொகை திட்டம்..! எப்படி பெறுவது..? Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசுகள், பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், உடல் ஊனமுற்றோர் அல்லது உடல் குறைபாடு உடையவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் நபர்கள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் ஊனமுற்றோர் அல்லது உடல் குறைபாடு உடையவர்களுக்கான உதவித் தொகை திட்டம்

ஊனமுற்றோருக்கான உதவித் தொகை பெறுவதற்கான தகுதி

ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர்கள் தமிழ்நாடு அரசு வழங்கிய திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் நபர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் நபரின் வயது வரம்பு 45 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 50% ஊனமுற்றோர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த திட்டத்தில் பயன் பெறும் நபர்கள் வருமான ஆதாரம் இல்லாமல் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் தொழில்முறை பிச்சைக்காரராக இருக்க கூடாது.

20 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன் மூலம், விண்ணப்பதாரர் நிதியுதவி பெறுபவராக இருக்கக் கூடாது.

ஓய்வூதியம் பெற நினைக்கும் நபர் ரூ.5,000-க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்து எதையும் வைத்திருக்க கூடாது.

இரண்டு கால்களையும் இழந்தவர்கள் இந்த ஓய்வூதியம் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்கத் தேவையில்லை

வயது வரம்பு இல்லாமல் பெற வேண்டுபவர்கள்

முழுமையாக குருட்டுத் தன்மை கொண்ட நபர்கள் வயது வரம்பு இல்லாமல் தமிழக அரசி இந்த ஓய்வூதியத்தைப் பெறலாம்.

வயது வரம்பு இல்லாமல், ஒருவர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற நினைப்பவர்கள், மாவட்ட ஆட்சி சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆகியோரால் அமைக்கப்பட்ட மாவட்டக் குழுவால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு, மாவட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அனுமதி பெற்றால், அந்த நபர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான வயது வரம்பு தடையாக இருக்காது.

தமிழக அரசின் ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள்

ஆதார் கார்டு (Aadhaar Card)

ரேஷன் கார்டு (Ration Card)

சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழ் நகல் (Medical Certificate Photo Copy)

சாதி சான்றிதழ் (Community Certificate)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த சான்றிதழ்களைப் பயன்படுத்தி, உடல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகையைப் பெறலாம்.

ஆதரவற்ற உடல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அறிக்கையின் படி, 50%-ற்கும் மேல் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்

தமிழக அரசின் இந்த திட்டம், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் வருகிறது. மேலே கூறப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்த நபர்கள், ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றவர்கள் ஆவர்.

இந்த வசதியைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர் இருக்கும் இடத்தில் உள்ள வருவாய் / மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தாசில்தாரைத் தொடர்பு கொள்வது அவசியம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Handicapped Scheme in Tamilnadu | Handicapped Pension Online Application Tamilnadu | Disability Scheme 2022 Tamil nadu | Handicapped loan Scheme in Tamilnadu | Physically Handicapped Pension Scheme in Tamilnadu | How to get Disability Certificate in Tamilnadu | Physically Handicapped Pension Application form Online | Physically Handicapped Pension Scheme in Tamilnadu Online Application | Disability Certificate Tamil nadu | How to Apply for Handicapped Pension | Handicapped Pension Online Apply | Handicapped Pension Application Status | Disability Scheme 2022 Tamil nadu | Disability Scheme 2022 Tamil nadu | Disability Pension Status Tamilnadu | How to Apply Handicapped Pension in Tamilnadu | How to Apply Disability Pension in Tamilnadu | How to Apply Senior Citizen Pension Online in Tamilnadu | How to Apply Pension Online in Tamilnadu | Online Status of Old Age and Handicapped Pension


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்