Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pension Scheme in Tamilnadu: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு…! கண்டிப்பா இத பண்ணியே ஆகணும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு….

Gowthami Subramani June 26, 2022 & 17:00 [IST]
Pension Scheme in Tamilnadu: ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு…! கண்டிப்பா இத பண்ணியே ஆகணும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு….Representative Image.

Pension Scheme in Tamilnadu: ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிகழ்ந்த காலத்தில், ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், இந்த 2022 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அவர்களின் வாழ்நாள் சான்றிதழை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் என்பதைப் பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ்

ஒருவரது வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பென்சன் கிடைக்கும்.

கொரோனாவால் நிறுத்தம்

கொரோனா பாதிப்பு இருக்கும் சமயத்தில், ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, 2020 மற்றும் 21 ஆகிய இரு ஆண்டுகளிலும், வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கான நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் படி, இந்த இரு ஆண்டுகளிலுமே ஓய்வூதியம் வழங்கப்படும்.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதனை https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.

சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவைகள்

அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம், வாழ்நாள் சான்றிதழ் பெற நினைக்கும் நபர்கள் உரிய கட்டணம் செலுத்தி சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறை வங்கியான (India Post Payments Bank) சேவையை பயன்படுத்தி, ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதாரர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழை கைரேகை குறியீட்டு முறையின் மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும், கைவிரல் ரேகை இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலியைப் பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதாரர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்

P.P.O எண்

ஆதார் எண்

வங்கி கணக்கு எண்

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்

தமிழக அரசு அறிவித்துள்ள அறிக்கையின் படி, குறிப்பிட்டுள்ள கால நேரத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்