Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Post Office Schemes in Tamilnadu: போஸ்ட் ஆபிஸில் பணம் சேமிக்கிறீர்களா..? இனிமே உங்களுக்கு ஜாக்பாட் தான். உயரும் வட்டி விகிதம்….! எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani June 26, 2022 & 13:40 [IST]
Post Office Schemes in Tamilnadu: போஸ்ட் ஆபிஸில் பணம் சேமிக்கிறீர்களா..? இனிமே உங்களுக்கு ஜாக்பாட் தான். உயரும் வட்டி விகிதம்….! எவ்வளவு தெரியுமா..?Representative Image.

Post Office Schemes in Tamilnadu: தபால் சேமிப்பு நிலையங்களில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தபால் நிலைய சேமிப்பு திட்டம்

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் மூலம் ஏராளக்கணக்கான நற்பலன்களை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். மேலும், தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளன. அதன் படி, ஒவ்வொரு காலாண்டும் தொடங்குவதற்கு முன், மத்திய நிதியமைச்சகம் அரசு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்வது அறிவிக்கும். அந்த வகையில், வரும் ஜூலை மாதம் 1 ஆம் நாள், அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதனளை உயர்த்தும் எனக் குறிப்பிடப்படுகிறது.

சமீபத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் படி, பல்வேறு வங்கிகளும் டெபாசி மீதான் வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், வரும் ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல் இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகித உயர்வு

தற்போது, வருங்காலத்திற்காக வைப்பு நிதி 7.1 சதவீத வருடாந்திர வட்டி வருமானத்தைத் தருகிறது. அதே சமயத்தில், வருடாந்திர வட்டியாக தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8 சதவீதம் வழங்குகிறது. மேலும், மூத்த குடிமக்கள் வரி சேமிப்பிற்கான திட்டத்தில் 7.4%-ம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6%-ம் வட்டி பெறப்படுகிறது.

இவற்றை தவிர, கிசான் விகாஸ் பத்திரா திட்டத்துக்கான வருடாந்திர வட்டி 6.9% வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஜூலை மாதம் முதல் இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்