Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமா...?

Muthu Kumar August 06, 2022 & 08:45 [IST]
இன்றைய பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமா...?Representative Image.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல், விலையை இந்திய ரூபாயின் மதிப்பில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதனால் டீசல் 7 ரூபாய் மற்றும் பெட்ரோல் 9.50 ரூபாய் குறைந்தது. 

இந்தியாவில் நேற்று கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதனையடுத்து, சென்னையில் கடந்த 75 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. 

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இன்னும் சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை