Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pyramid Schemes in Tamil: “உங்களுக்குக் கீழ் ஆட்கள் சேர சேர, உங்க கையில பணம்” – ஆனா இது எப்படி செயல்படுது தெரியுமா..?

Gowthami Subramani June 17, 2022 & 17:20 [IST]
Pyramid Schemes in Tamil: “உங்களுக்குக் கீழ் ஆட்கள் சேர சேர, உங்க கையில பணம்” – ஆனா இது எப்படி செயல்படுது தெரியுமா..?Representative Image.

Pyramid Schemes in Tamil: கிரிப்டோ, பங்குச்சந்தை, போன்றவற்றை வரிசையாகக் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று இந்த பிரமிட் திட்டமும். இதனைப் பற்றிய விவரத்தை இந்தப் பதிவில் காணலாம்.

பிரமிட் திட்டம் (Pyramid Schemes in Tamil)

பிரமிட் திட்டம் என்பது வணிகத்தில் சட்டப்பூர்வமாக மாறுவேடமிடும் சட்டவிரோத நிதி மோசடி ஆகும். இவை பொன்சி திட்டம் (Ponzi Schemes) மற்றும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களைப் போலவே இருக்கின்றன. இந்த மூன்று அமைப்புகளுக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

இந்தப் பதிவில், பிரமிட் திட்டம் பற்றியும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் பொன்சி அல்லது MLM திட்டங்களைத் தவிர்த்து, இவை எவ்வாறு கூறப்படுகிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பிரமிட் திட்டத்தின் பொருள்

பொதுவாக பிரமிட் திட்டம் என்பது ஒரு மோசடியாக உள்ளது. இதற்கு சந்தைப்படுத்துதல் நிறுவனம் என்ற வேறு பெயரும் உண்டு. இவ்வாறு திட்டத்தில் புதிய பங்கேற்பாளர்களைச் சேர்ப்பதற்கு பெரிய லாபத்தை அளிப்பதாக உள்ளது.

ஆனால், உண்மையில் பிரமிட் திட்டம் என்பது சேவைகள் அல்லது தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஒரு சட்டப்பூர்வமான நிறுவனமாகவேத் தோன்றியது. ஆனால், இது பொருள்கள் தயாரிப்பு அல்லது விற்பனைக்குப் பதில், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலேயே கருத்தாய் இருக்கிறது. இவ்வாறு புதிய பங்கீட்டாளர்களைக் கொண்டு வரும் பங்கேற்பாளர்களுக்கு லாபம் அளிக்கக் கூடியதாக அமைகிறது.

பொதுவாக, இந்தத் திட்டத்தில் பங்குபெறக் கூடிய நபர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர்கள் கட்டணங்கள் மற்றும் கமிஷன்களை விதிக்கும். மேலும், இந்த நிறுவனத்தில் தொடர்ந்து இருக்கும் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடப்பட்ட தொகையில் தயாரிப்பு சரக்குகளை வாங்க வேண்டும். ஆனால், இது தயாரிப்புப் பொருள்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதைத் தவிர, பங்கேற்பாளர்களை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இதன் செயல்பாடு

இந்தத் திட்டத்தின் முதன்மைச் செயல்பாடாக விளங்குவது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

  • ஒரு நபர் அல்லது ஒரு குழுவாக முதலில் பிரமிட் திட்டத்தைத் தொடங்குவார்கள். இவர்கள் வணிகத்தைத் தொடர பங்கேற்பாளர்களை நியமிப்பர்.
  • இவ்வாறு பங்கேற்பாளர்கள் இத்திட்டத்தின் சேருவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதன் படி, நிறுவனர்கள் பங்கேற்பாளர்களின் கட்டணம் மற்றும் விற்பனைக் கமிஷன்களைப் பெறுகிறார்கள். பிரமிட் என்ற சொல் மோசடியின் கட்டமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.
  • இதில், பங்கேற்பாளர்கள் தங்களுக்குப் பணியாற்ற பல கூடுதல் பங்கேற்பாளர்களை நியமிப்பர். இவர்கள் உறுப்பினர்கள் ஆவர். இவ்வாறு உறுப்பினர்கள் செலுத்தக்கூடிய கட்டணம் மற்றும் விற்பனை பொருள்களுக்கான கமிஷன்களை பங்கேற்பாளர்கள் பெறுவர்.
  • இவ்வாறு சங்கிலித் தொடராக, ஒருவருக்குக் கீழ் ஒருவர் சேர்க்கப்பட்டு கட்டணங்கள் மற்றும் கமிஷன்களைப் பெறுகின்றனர்.

ஆனால், இதில் முக்கியமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தயாரிப்புப் பொருள்களை வாங்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்