Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வது எப்படி? அனைத்து தகவல்களும் இங்கே!

UDHAYA KUMAR October 18, 2022 & 16:49 [IST]
ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வது எப்படி? அனைத்து தகவல்களும் இங்கே!Representative Image.

TNPDS தமிழ்நாடு ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறை

TNEPDS Android Official App வழியாகவும் நீங்கள் முகவரி மாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கான  வழிமுறைகளை படிப்படியாக செய்வது எப்படி என்பதை இங்கு தந்துள்ளோம். முகவரி மாற்றம் செய்ய நீங்கள் அதிகாரப்பூர்வ  TNPDS இணையதளத்தை நாட வேண்டும் அல்லது அருகிலுள்ள சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

The benefits of having a smart ration card

ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்திருப்பதின் அவசியமும் நன்மையும்

1 TNPDS Online Ration Card Correction | ஆன்லைன் ரேஷன் கார்டு திருத்தம்
1.1 Ration Card Correction | ரேஷன் கார்டு திருத்தம்
1.2 The following details of functions are required to update or correct family cards online.
1.3 How to do TNPDS ration card correction in Tamil Nadu?
1.3.1 Find out the service level related to the card Process.
1.3.2 About tnepds app

TNPDS Online Ration Card Correction | TNPDS ஆன்லைன் ரேஷன் கார்டு திருத்தம்

TNPDS Online Ration Card Correction in Tamil Nadu அல்லது  TNPDS ஆன்லைன் ரேஷன் கார்டு திருத்தம் நமக்கு ஆன்லைன் மூலமாக நம்முடைய ரேஷன் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள உதவுகிறது. மேலும் இங்கு நாம்  tnepds app குறித்தும் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 

Ration Card Correction  ரேஷன் கார்டு திருத்தம் :

தமிழ் நாடு மாநில அரசு (Tamil Nadu state government) ஆன்லைன் ( online system) வழியாக ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளில் (smart ration cards) திருத்தம் மேற்கொள்ள வழி வகை செய்துள்ளது.  

ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் (smart ration cards) தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்  (TamilNadu Public Distribution System (TNPDS) website) ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல திருத்தங்களை மேற்கொள்ள வழி வகை செய்துள்ளது. 

#How to Check TNPDS Smart Card Status Online

ரேஷன் அட்டைகளில் நீங்கள் கீழ்கண்ட திருத்தங்களை செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளும் பின்வருமாறு. 

  • குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்தல் | Change of Address in Family card.
  • குடும்ப தலைவரின் பெயர் மாற்றம் செய்தல் | Change the Head of the Family
  • குடும்ப அட்டையில் உறுப்பினரின் பெயரை நீக்கம் செய்தல் | Name deletion in the family card.
  • குடும்ப அட்டையில் உறுப்பினரின் பெயரைச் சேர்த்தல் | Name inclusion on the family card
  • குடும்ப அட்டை குறித்த மற்ற சேவைகள் | Find out the service level related to the card.

TNPDS இணையதளத்தில் குடும்ப அட்டை திருத்தம் செய்வது எப்படி?
How to do TNPDS ration card correction in Tamil Nadu?

அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள். 

படி 1:  இந்த பக்கத்தின் வலப்புறம் மேலே உள்ள beneficiary login என்பதை கிளிக் செய்யுங்கள். 

Click on the beneficiary login on the webpage’s top right side.

TNPDS Online Ration Card Correction

படி 2 :  அது உங்களை Login page க்கு அழைத்துச் செல்லும்

படி 3 : ரேஷன் கடையில் பதிவுசெய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணை உள்ளிடுங்கள். நீங்கள் ரேசன் கடையில் பொருள் வாங்கினால் ஒரு எண்ணுக்கு மெசேஜ் வருமே, அதுதான் பதிவு செய்யப்பட்ட எண். 

படி 4 : OTP அனுப்ப என்பதை கிளிக் செய்து காத்திருங்கள் 

Online Ration Card Correction in TamilNadu

 

படி 5 : உங்கள் மொபைலுக்கு ஒரு OTP அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும். அதை இந்த கட்டத்தில் உள்ளிடுங்கள். 

படி 6: ஸ்மார்ட் கார்டு டிடெய்ல்ஸ் என்பதை கிளிக் செய்து அதில் திருத்தம் செய்யப்படவேண்டிய சரியான விசயங்களை பூர்த்தி செய்யுங்கள்

TNPDS Online Ration Card Correction

படி 7 : தவறாக பதிவிட்டுவிட்டால் மீண்டும் சரியானதை பதிவிட எடிட் என்பதை கிளிக் செய்யுங்கள். 

படி 8 :  தேவைப்படும்பட்சத்தில், அதிகாரப்பூர்வ டாக்குமெண்ட் ஒன்றை பதிவிட வேண்டியிருக்கும். அது ஆதார் கார்டாகவோ, மற்ற சில அரசு சார்பில் வழங்கப்பட்ட கார்டாகவோ இருக்கலாம்

படி 9 : அனைத்து திருத்தங்களையும் முடித்த பிறகு, சப்மிட், அப்ரூவல் என்பதை கிளிக் செய்யுங்கள்

படி 10 : அனைத்து திருத்தங்களையும் முடித்து, சப்மிட் கொடுத்த பிறகு உங்களுக்கு ரெஃபரெண்ஸ் எண் ஒன்று தரப்படும். அதன்மூலம் நீங்கள் உங்கள் தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள முடியும்

படி 11: கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து TNEPDS ஆப்பை டவுண்லோட் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் செய்த திருத்தம் ஏற்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்துகொள்ளும் முறை

மீண்டும் இதே அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று லாக் இன் செய்து கொள்ளவேண்டும்

உங்களுக்கு தரப்பட்டுள்ள  ரெஃபரெண்ஸ் எண்ணை இதில் உள்ளிடவேண்டும் 

ரெஜிஸ்டர் என்பதை கிளிக் செய்யவேண்டும்

tnepds app or tnpds to find service request

உங்களுக்கான சேவை எந்த அளவில் இருக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்