Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Ration Card Latest News Today in Tamil: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….! இனி வரிசையில் நின்னு பொருள்கள் வாங்கத் தேவையில்லை…!

Gowthami Subramani June 14, 2022 & 17:10 [IST]
Ration Card Latest News Today in Tamil: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….! இனி வரிசையில் நின்னு பொருள்கள் வாங்கத் தேவையில்லை…!Representative Image.

Ration Card Latest News Today in Tamil: மாநில அரசு, மக்களுக்கு ரேஷன் கார்டு விஷயத்தில் புதிய வசதியை அமல்படுத்திக் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தற்போது ஏடிஎம் உபயோகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது (Ration Card Latest News Today in Tamil).

ரேஷன் கார்டு திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், அரசு தரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே ரேஷன் உணவுத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றன. மேலும், இத்திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது (Ration Card News).

புதிய திட்டங்கள்

இவ்வாறு மக்களுக்கு உதவக் கூடிய வகையில் இருக்கும் இந்தத் திட்டத்தில், பல்வேறு சிறப்பம்சங்களைச் செய்து வருகிறது (Ration Card New Updated News in Tamil).

தமிழகத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு குடும்பத்திலிருந்து வேறு இடத்திற்குப் பணிபுரியச் செல்லும் போது, அவர்கள் அந்த ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க புதிய ரேஷன் கார்டு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கவே, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒரு ரேஷன் கார்டை வைத்துக் கொண்டே வேறு ஊரிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு, ரேஷன் கார்டில் உள்ள எண் மற்றும் ஆதார் எண் போன்றவைத் தேவைப்படும் (Ration Card Holders Benefits in Tamil).

வரிசையில் நிற்பதைத் தவிர்க்க

இது போன்ற ஏராளமான அப்டேட்டுகள் ரேஷன் திட்டத்தில் இருக்கும் மக்களுக்காக வகுக்கப்பட்டது. அதில் ஒன்றாக, தற்போது ரேஷன் கடையில் மக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டம் விரைவில், உத்தரகாண்ட் அரசால் தொடங்கப்பட உள்ளது. ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச பொருள்களைப் பெறுவதற்கு இனி கடைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை என மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா அறிவித்துள்ளார் (Ration ATM System).

மணிக்கணக்காக காத்திருக்கும் நிலை

ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள், ரேஷன் கடைக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் ரேஷன் கடைக்குப் போகாமல் இருக்கின்றனர். அதன் படி, எடை மெஷின் போன்றவற்றில் டிஜிட்டல் முறையிலான தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டன (How to Get Ration ATM System). இருந்தபோதிலும், ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருப்பது ஒரு பெரிய பிரச்சனையாகவே கருதப்பட்டு வருகிறது.

ஏடிஎம் மெஷினைப் பயன்படுத்துதல்

இந்தப் புதிய திட்டத்தில் ஏடிஎம் மெஷினைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இது அதிவிரைவாக சில மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் எப்போது வேணாலும், உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளலாம் (Ration Card News in Tamil). இந்தத் திட்டம் ஏற்கனவே ஒரிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி, இத்திட்டம் அமல்படுத்தப்படும் மாநிலம் மூன்றாவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் உள்ளது.

எவ்வாறு செயல்படுகிறது?

இந்த அருமையான திட்டத்தின் மூலம், ரேஷன் கடைக்குச் சென்றாலே நாம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், எடை மெஷின்களில் நடைபெறும் மோசடிகளும் குறைக்கப்படும். அது மட்டுமில்லாமல், உணவு தானியங்களைக் குறைந்த அளவில் வழங்குவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த வகை குறைகளும் இந்த புதிய திட்டத்தின் மூலம் சரி செய்யப்படும் என நம்பப்படுகிறது. மேலும், இத்திட்டம் தமிழகத்துக்கு விரைவில் வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன (Ration Card Update).

மக்களிடையே வரவேற்பு

இந்த சிறப்பான திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தில், நேரடியாக ஏடிஎம் இயந்திரம் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவற்றைப் பெற முடியும். ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் செலவிடுவதைத் தவிர்க்கும் இத்திட்டம் பெரும் வசதியை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்