Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…! இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம்…?

Gowthami Subramani July 12, 2022 & 15:15 [IST]
ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…! இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம்…? Representative Image.

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட க்கிய அறிவிப்பில், இனி உலக நாடுகளுடனான ஏற்றுமதி/இறக்குமதி பரிவர்த்தனைகளை இந்திய ரூபாயில் மேற்கொள்ள தேவையான கூடுதல் ஏற்பாடுகளை செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய கரன்சியின் தேவை அதிகரிப்பு மற்றும் உலக வர்த்தக சமூகத்தின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய ரூபாயின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் ஏற்பாடுகளை செய்யுமாறு வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு முன், இந்திய ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலவாணியத் துறையின் முன் அனுமதியைப் பெற்றிருப்பது அவசியம் என மேலும் கூறியுள்ளது.

இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம்

உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி பரிவர்த்தனையில் ரூபாய் மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கவும், உலகளாவிய வர்த்தக சமூகத்தின் அதிகரித்து வரக்கூடிய ஆர்வத்தை ஆதரிப்பது போன்றவற்றிற்கு இந்த கோரிக்கை முக்கியத்துவம் வகுக்கிறது.

ஏற்கனவே உள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு FEMA விதிகளின் படி அனைத்து பரிவர்த்தனைகளையும் இந்திய ரூபாயில் மேற்கொள்வதோடு பைனல் செட்டில்மென்ட் இலவச அந்நிய செலாவணி சேவையுடன் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. நேபாளம் மற்றும் பூடான் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும்.

அதன் படி, அனைத்து நாடுகளுக்கான பைனல் செட்டில்மென்டை வழங்கினால் ரிசர்வ் வங்கி, இனி இந்திய ரூபாயில் வர்த்தகம் முடியும் என FIEO தலைவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை, இந்திய ரூபாயில் வர்த்தகம் மற்றும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு தீர்வு காண வழி வகுப்பதாக உள்ளது.

சர்வதேச நாணயமாக இந்திய ரூபாய்

இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக அங்கீகரிக்க இது வழிவகை செய்யும்.

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறியதை கிரான்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனத்தின் பங்குதாரர் விவேக் ஆர் ஐயர் கூறியதாவது, “இறக்குமதியின் விளைவாக டாலர் வெளியேற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் அந்நிய செலவாணி கையிருப்பைப் பாதுகாக்கவும் முடியும். எனவே இது ரிசர்வ் வங்கியின் சிறந்த நடவடிக்கை ஆகும்.” எனக் கூறியுள்ளார்.

INR-ல் பணம் செலுத்துதல்

வர்த்தக பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு காண, பங்குதாரர் பணம் செலுத்தும் இந்திய வங்கி அவர்கள் வர்த்தகம் செய்யும் நாட்டினுடைய வங்கிகளில் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரா கணக்குகள் தொடங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், இந்த முறையின் மூலம் இறக்குமதிகளை மேற்கொள்ளகூடிய இந்திய இறக்குமதியாளர்கள் இந்திய ரூபாயில் (INR) பணம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள நபருக்கு வங்கியின் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கில் இருந்து பணம் செலுத்தப்படும்.

Vostro கணக்கைப் பயன்படுத்தி

அதன் படி, ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த விவரங்கள் வோஸ்ட்ரோ கணக்கில் இருக்கும். மேலும், இந்த குறிப்பிட்ட ஸ்பெஷல் வோஸ்ட்ரோ கணக்கில் இருக்கும் நிலுவைகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் இந்திய ரூபாயில் செலுத்தப்படும். இந்த முறையின் மூலம், வெளிநாட்டு இறக்குமதியாளர்களிடமிருந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதிக்கு முன்பணத்தை ரூபாயில் பெற உதவும்.

மேலும், இந்த சிறப்பு Vostro கணக்குகளில் இருக்கும் இருப்புத் தொகையை பல்வேறு திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்காகப் பயன்படுத்தலாம். இதற்கான உத்தரவுகள் விரைவில் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்