Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னது… இனி கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமா..? ஆர்பிஐ தெரிவித்த அதிர்ச்சி தகவல்..!

Gowthami Subramani August 18, 2022 & 17:40 [IST]
என்னது… இனி கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமா..? ஆர்பிஐ தெரிவித்த அதிர்ச்சி தகவல்..!Representative Image.

இந்திய ரிசர்வ் வங்கி கூகுள் பே போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடுவதாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல்

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது, ஆன்லைன் முறையில் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இயல்பாக செய்யப்பக்கூடிய பணப் பரிவர்த்தனை ஆகும். இந்த முறையில், கையில் பணம் செலுத்துவதைத் தவிர்த்து, ஆன்லைனில் நமது வங்கிக் கணக்கை இணைத்து வைத்து பின், நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் செலுத்துவதாகும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

பெரும்பாலான இடங்களில் பரிவர்த்தனைக்காக, டிஜிட்டல் சேவைகளே பயன்படுத்தப்படுகிறது. சிறிய பெட்டி கடை முதல், பெரிய அளவிலான கடைகள் உள்ளிட்டவற்றில் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, ஆன்லைன் டிஜிட்டல் பேமென்ட் வசதிகளாக விளங்கும் Google Pay, PhonePe, paytm, BM UPI போன்ற பல்வேறு வழிகளில் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதார சரிவு

கொரோனா பேரிடருக்குப் பின்னர், ஏராளமான சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஏராளமான செயல்முறையைச் செய்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதார சரிவிலிருந்து நாட்டைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பால் சாதாரண மக்களும் பாதிக்கப்படுவர் எனக் கூறப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் பகீர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் படி, ரிசர்வ் வங்கி பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வாறு கொண்டுவரப்படும் பரிமாற்றத்திற்கான கட்டணம், முதலீட்டை மீட்டெடுப்பதன் நோக்கத்தில் விதிக்கப்பட்டதாகவும், இது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை சேமிப்பு கட்டணத்திற்கான காரணம்

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை பொதுமக்களின் தினசரி வாழ்வில் ஓர் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இப்படி, மக்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய பயன்பாடாக விளங்கும் இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அறிவித்த செய்தியால், எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

RBI | UPI | ReServe Bank of India | MDR | Digital Payments | Unified Payments Interface | IMPS | Online Transactions | Payment Service Providers | Charges for Digital Payments | Charges for Gpay Transaction | Fees for Digital Transaction | Reserve Bank of India


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்