Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனியார் அல்லது பொதுத்துறை வங்கி...இதுல எதில் லோன் வாங்குறது? | Home Loan Private vs Public Bank

Priyanka Hochumin Updated:
தனியார் அல்லது பொதுத்துறை வங்கி...இதுல எதில் லோன் வாங்குறது? | Home Loan Private vs Public Bank Representative Image.

பொதுவாக நடுத்தர மக்களின் கனவே தங்களுக்கென ஒரு சொந்த வீடு இருப்பது தான். அதை கடன் வாங்காமல் கட்டுவது முடியாத காரியம் என்று நமக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது வங்கியில் வீட்டு கடன் வாங்குவது தான் சாத்தியம். நமக்கு ஏற்படும் குழப்பம் என்னவென்றால் பொதுத்துறை வங்கி அல்லது தனியார் வங்கியில் எங்கு லோன் வாங்குவது சரியாக இருக்கும் என்பது தான். அதைப் பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப்போகிறோம்.

தனியார் அல்லது பொதுத்துறை வங்கி...இதுல எதில் லோன் வாங்குறது? | Home Loan Private vs Public Bank Representative Image

எது ஓகே...

இப்போ இரண்டு வங்கியை பார்க்கும் போது, இரண்டுமே ஒவ்வொரு விஷயத்தில் பெஸ்ட்டாக இருக்கும். அதில் முக்கிய குறிப்பாக பார்க்கும் போது கடனுக்கான வட்டி தான். பொதுத்துறை வங்கியில் வட்டி மற்றும் பரிசீலனைக் கட்டணம் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். காரணம்! நிதி திரட்டும் செலவு (Cost Of Funds) மிகக் குறைவு மற்றும் அதிக மக்களின் பென்ஷன், சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு இருப்பதால் தான்.

இதுவே தனியார் வங்கியை பொறுத்த வரையில் அவர்களைப் போல குறைந்த வட்டியில் கொடுக்க முடியாது. ஏனெனில், இவர்கள் மக்களிடம் இருந்து டெபாசிட் அல்லது மற்ற வழிகளில் நிதி திரட்டி கடன் வழங்குகின்றனர். எனவே, தான் வட்டி அதிகமாக இருக்கிறது. இருப்பினும் தனியார் வங்கியில் வீட்டு கடன் உடனே கிடைக்கும் மற்றும் டெக்னாலஜியில் மேம்பட்டு இருக்கும்.

தனியார் அல்லது பொதுத்துறை வங்கி...இதுல எதில் லோன் வாங்குறது? | Home Loan Private vs Public Bank Representative Image

அதில் என்ன சிக்கல்...

பொதுத்துறை வங்கியில் ஆட்கள் பற்றுக்குறை தான் காரணம். ஏனெனில் அந்த வங்கியில் வீட்டு கடனுக்கு என்று தனி பிரிவு இல்லாததால், இருப்பவர்கள் மூலம் வீட்டு கடை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இதில் தனியார் வங்கி முன்னே இருக்கிறது. ஏனெனில் மதத்திற்கு வீட்டு கடன் இவ்ளோ தொகை இருக்க வேண்டும் என்று டார்கெட் செய்து வேலை செய்கின்றனர். மேலும் அந்த ஊழியர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு ஊக்கத் தொகை பிரித்து தரப்படுவதால் அவர்கள தீவிரமாக வேலை செய்கின்றனர்.

தனியார் அல்லது பொதுத்துறை வங்கி...இதுல எதில் லோன் வாங்குறது? | Home Loan Private vs Public Bank Representative Image

இதெல்லாம் கூட பண்ணுவாங்க!

வீட்டு கடன் வாங்குவது அவ்ளோ எளிதான விஷயம் கிடையாது. ஏனெனில் அதற்கு தேவையான ஆவணங்கள், மதிப்பீடு அறிக்கை என்று நிறைய உள்ளது. இதனால் நீங்கள் பொதுத்துறை வங்கியில் கடன் வாங்க நினைத்தால் ஆள் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்கள் ஆகும் லோன் நமக்கு கிடைக்க. இதுவே தனியார் வங்கிக்கு சென்றால் அவர்கள் வீட்டிற்கே வந்து - ஆவணங்களைச் சேகரிப்பது மற்றும் ஜெராக்ஸ் எடுப்பது, வழக்கறிஞரிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவது, பொறியாளரிடம் மதிப்பீட்டு அறிக்கை பெறுவது போன்ற அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். இதனாலே மக்கள் அதிக வட்டி என்றாலும் தனியார் வங்கியைத் தேடி செல்கின்றனர். ஆனால் இது பொதுத்துறை வங்கிக்கு சிக்கலாக மாறலாம் என்பதால் தற்போது அவர்களும் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்