Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிரடியாக உயர்ந்த ரெப்போ விகிதம்..! ரிசர்வ் வங்கி அறிவித்த பகீர் அறிவிப்பு.. வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்..!

Gowthami Subramani August 05, 2022 & 12:25 [IST]
அதிரடியாக உயர்ந்த ரெப்போ விகிதம்..! ரிசர்வ் வங்கி அறிவித்த பகீர் அறிவிப்பு.. வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்..!Representative Image.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி முக்கிய கடன் விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதன் படி, இந்த விகிதம் முந்தைய நிலையை விட 5.40% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இன்று அதாவது ஆகஸ்ட் 5 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின் படி, இதன் முக்கிய கடன் விகிதத்தை 50bps புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அவ்வாறு கொரோனா காலத்திற்கு முன் இருந்த நிலையை விட 5.40% சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விகித அதிகரிப்பிற்கான காரணம்

இந்தியாவின் பொருளாதாரம் சமீக காலமாக மிகுந்த தாழ்ந்த நிலையுடன் இருப்பது மற்றும் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாகவும் இந்திய ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், இவ்வாறு தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்ந்து கொண்டே வட்டி விகிதத்தினால், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி இலக்கு

ஜூன் மாதத்தின் சில்லறை பணவீக்கம் 7% ஆக இருந்த நிலையில், ரிசர்வ் வங்கி 2 முதல் 6 சதவீத நடுத்தர கால இலக்கை விட அதிகமாக முக்கிய கடன் விகிதம் அல்லது ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளாக உயர்த்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரிசர்வ் வங்கி அதிகரித்த வட்டி விகிதத்தில் இதுவே அதிகபட்சமாக கருதப்படுகிறது.

விலைவாசி குறையத் தொடங்கினாலும்

அதன் படி, தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90%-லிருந்து 5.40% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மேலும், இது குறித்து ரிசர் வங்கி தலைவர் சக்தி காந்ததாஸ் தெரிவித்ததன் படி, நாட்டில் விலைவாசி உயர்வு சற்று தனியத் தொடங்கிய போதிலும், இது பொதுமக்களுக்கு அசவுகரியத்தையே ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. மேலும், இந்த 2022-23 ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி விதம் 7.2% ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது போலவே, பணவீக்க விகிதமும் 6.7% ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் அடுத்தடுத்த காலாண்டுகளில் பணவீக்கம் மெல்ல குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பொருளாதாரம் பலமாக உள்ளது

கடந்தாண்டில் வங்கிகளில் உள்ள கடன் வளர்ச்சி 5.5% ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டு 14% ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் இந்திய பொருளாதாரம் பலமாகத் தான் இருக்கிறது என்றும், சர்வதேச சூழலில் டாலரின் மதிப்பாக இருப்பது தான் காரணம் என கூறினார் ரிசர்வ் வங்கியின் தலைவர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ரெப்போ விகித உயர்வால், வங்கிக் கடன் பொதுவாக நிறைய பேரை பாதிக்கும் அபாயமாக உள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தப்படுவதால், வங்கிகளில் கூடுதல் வட்டி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதன் படி, வங்கிகள் வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றிற்கான வட்டியை அதிகரிக்கும் என வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்