Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிக பெண் விமானிகளை உருவாக்கும் இந்தியா… ஆய்வில் வெளிவந்த பகீர் காரணம்..!

Gowthami Subramani August 09, 2022 & 12:15 [IST]
அதிக பெண் விமானிகளை உருவாக்கும் இந்தியா… ஆய்வில் வெளிவந்த பகீர் காரணம்..!Representative Image.

உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா அதிக அளவிலான பெண் விமானிகளை உருவாக்கி வருகிறது. சர்வதேச பெண்களுக்கான ஏர்லைன் அமைப்பின் கூற்றுப் படி, உலகின் மிகப்பெரிய விமானச் சந்தையாக இருக்கும் அமெரிக்காவில் 5.5%, இங்கிலாந்தில் 4.7% என்ற அளவில் பெண் விமானிகள் உள்ளனர். இவ்வாறு கணக்கிடும் போது, இந்தியாவிலே அதிக பெண் விமானிகளின் விகிதம் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல துறைகளில் சாதித்தல்

ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட பெண்களே இன்று பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். தற்போது, பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில், பிற நாடுகள் மற்றும் துறைகள் பல்வேறு நிறுவனங்களில் அவர்கள் சிறப்பித்து வருகின்றனர். சில ஆய்வுகள் கூறுவது, பெண் விமானிகளுக்கு பாதுகாப்புச் சிக்கல்கள் குறைவாக இருப்பதாக கூறுகின்றன. மேலும், விமான நிறுவனங்களை கையாளும் வகையிலும், தொழில் பற்றாக்குறையை போற்றும் வகையிலும் கோவிட் கால நிலைக்குப் பிறகு பெண்களை வேலைக்கு அமர்த்துவது உயர்ந்துள்ளது.

பெண்கள் விமானிகளாக ஆக காரணம்

கடந்த 1948 ஆம் ஆண்டு தேசிய கேடட் கார்ப்ஸின் ஏர் விங் என்று அழைக்கப்படக் கூடிய இளைஞர் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு மைக்ரோலைட் விமானங்களைப் பறக்க விடுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இந்த சிறப்பான திட்டம், இந்திய பெண்களை விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஈர்த்தது. இருந்தபோதிலும், இந்திய விமானப் படை 1990 முதலே, ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களில் பெண் விமானிகளை நியமிக்கத் தொடங்கியது.

திறமைக்கு அங்கீகாரம்

இந்தியாவில் உள்ள சில விமான நிறுவனங்கள், பெண்களுக்கான திறமைகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு கொள்கைகளை வகுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் விமான நிறுவனமாக விளங்கக் கூடிய IndiGo நிறுவனம், பெண்களுக்கு அவர்களது கர்ப்ப காலத்தில் பயணக் கடமைகளைத் தவிர்த்து பெண்விமானிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக வேலை செய்ய வழி வகுத்தது.

பற்றாக்குறையை நீக்க

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானிகள் தொடர்ச்சியான பற்றாக்குறை காரணமாக, விமானங்களை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இருக்கும். இதனைக் குறைப்பதற்காக, பெண்களை விமானிகளாக பணியமர்த்தும் நடவடிக்கை உருவானது. அது மட்டுமல்லாமல், பெண்கள் அவர்களுக்குள் உள்ள திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் இது அமையக் கூடியவையாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How Many Female Pilots are there in India | Beautiful Female Pilots in India | Who is the first Woman Pilot in India | Indian Female Pilot Instagram | Best Female Pilot in India | Youngest Female Pilot in India | How Many Female Pilots are there in Indian air force | Salary of Female Pilot in India | India Women Airline Pilots | India Women Airline Pilots News | India Women Airline Pilots Greater Than US


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்