Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Recent PF Interest Rate: உங்களுக்கு PF பிடிக்கிறாங்களா..? உங்களுக்கொரு அதிர்ச்சி தகவல்

Gowthami Subramani June 07, 2022 & 16:35 [IST]
Recent PF Interest Rate: உங்களுக்கு PF பிடிக்கிறாங்களா..? உங்களுக்கொரு அதிர்ச்சி தகவல்Representative Image.

Recent PF Interest Rate: மத்திய அரசு, வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் PF-ன் வட்டி விகிதம் குறைப்புக்கு, இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் பெரு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதி (Provident Fund)

ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களுக்குக் கிடைக்கும் மாதாந்திரச் சம்பளத்தில் சிறிது தொகை இருப்பு வைக்கப்பட்டு, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்தப் பணத்தைக் கொடுப்பதாகும். மத்திய அரசு செயல்படுத்தும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில், தொழிலாளர்களும், தொழில் தருபவர்களும் பங்கு பெறுவர். இந்த பிஎஃப் தொகை ஊழியர்களுக்கு வட்டி விகிதத்துடன் தரப்பட்டு வருகிறது (Employees Provident Fund).

சென்ற மாதங்களில்

மத்திய அரசு நிதி நலனுக்கு ஏற்ப வட்டி விகிதத்தை கூட்டவும் குறைக்கவும் செய்கிறது. அதன் படி, சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த PF தொகை பெறுவதற்கான வட்டி விகிதம் 8.5% ஆக இருந்தது. இந்த வட்டி விகிதத்தில் ஊழியர்களுக்கு இருப்புத் தொகை அவர்களின் ஓய்வு காலத்தில் பெறப்படுகிறது.

வட்டி விகிதம் குறைப்பு

ஆனால், இந்த 2022 ஆம் ஆண்டின் நிதியாண்டு காலமான மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பிஎஃப்-ற்கான தற்போது வட்டி விகித்ததை குறைத்துள்ளது. அதன் படி, பிஎஃப்-ற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து, 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த PF தொகைக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பது இதுவே முதல் முறையாகும். மத்திய அரசின் இந்த வட்டி விகிதக் குறைவு அறிவிப்பால், பிஎஃப் பயன் பெறுபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது (Employees Provident Fund in Details).

மத்திய அரசின் ஒப்புதல்

இந்த வட்டி விகிதக் குறைப்புக்கான நடவடிக்கைக்குத் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி, 2021-22 ஆம் நிதியாண்டுக்கு 8.1% என்ற அளவில் வட்டி விகிதம் வழங்கப்படும் (EPFO).

மேலும், இந்த வட்டி விகிதத்திற்கு மத்திய அறங்காவலர் வாரியமும் பரிந்துரை செய்தது. அதனால், இதற்கான இறுதி ஒப்புதலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்றக் குறைவான வட்டி விகிதம்

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பி.எஃப் தொகைக்கான வட்டி விகிதம் 8.65% சதவீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து 2017-18 ஆம் ஆண்டில், 8.55 சதவீதக் குறைந்து காணப்பட்டதும். மேலும், 2018-19 ஆம் ஆண்டில் மீண்டும் 8.65 சதவீதத்திற்கே ஏறியது. மேலும், 2020-21 ஆம் நிதியாண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8.5%-ஆக இருந்தது (EPFO Member Login).

இவ்வாறு சிறிது சிறிதாக, ஏற்றம் இறக்கம் கண்ட வட்டி விகிதம் தற்போது மிகவும்  குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பிஎஃப் பெறும் உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இது குறைவு அல்ல

இதனை, குறைவான வட்டி என்றும் கூற முடியாது. அதாவது, பென்சன் அமைப்புகள் வழங்கக் கூடிய வட்டி விகிதத்தை விட இது அதிகம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும், வழக்கத்தை விட விரைவாக, பிஎஃப் வைத்திருக்கும் கணக்குதாரர்களுக்கு இந்த ஆண்டு வட்டி தொகை செலுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருந்த போதிலும், ஊழியர்களின் மத்தியில் இந்தக் குறைவு ஒரு அதிர்ப்தியையே ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்