Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் முதலிடம் தான்…! இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி..! காரணம் என்ன தெரியுமா..?

Gowthami Subramani August 08, 2022 & 16:30 [IST]
பணத்தில் மட்டுமல்ல குணத்திலும் முதலிடம் தான்…! இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி..! காரணம் என்ன தெரியுமா..?Representative Image.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முகேஷ் அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத சம்பளம் வேண்டாம் என அறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்திய கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருப்பவரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் தலைவராகவும் இருப்பவர், முகேஷ் அம்பானி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியத் தொகை பெற வில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, ரிலையன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 2020-21 ஆம் நிதியாண்டின் அறிக்கையில் குறிப்பிட்டதாவது, ஊதியம் என்ற இடத்தில் இல்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரிடரால் ஏற்பட்ட விபரீதம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா எனும் பேரிடரால், ஏராளக்கணக்கான நஷ்டங்கள் ஏற்பட்டன. அவற்றில் வேலை இழந்து சில பேர், ஊதியம் அதிகம் கிடைக்காமல் சில பேர் என பொருளாதார ரீதியாகவும் பெருமளவு கஷ்டப்பட்டனர். அவற்றின் தாக்கம் இன்றளவும் குறையாது, இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.

இழப்புகளை ஈடுகட்ட

இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சி அதிகமாகி வந்தது. அதன் படி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா பேரிடர் காரணமாக, பல்வேறு இழப்புகளை ஈடுகட்டும் வகையில், முகேஷ் அம்பானி தானாக முன் வந்தார். அதன் படி, தனக்கு மாத ஊதியம் வேண்டாம் என அறிவித்திருந்தார். இது 2021- 22 ஆம் நிதியாண்டிலும், தனக்கு மாத ஊழியம் வேண்டாம் என விட்டுக் கொடுத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்த இரண்டு ஆண்டுகளாகவே, மாத ஊதியம் வாங்காமல் இருந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஊதியம் மட்டுமல்ல இதையும் விட்டுக் கொடுத்தார்

முகேஷ் அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியத் தொகை பெறவில்லை என்ற செய்தி எல்லோருக்குமே ஓர் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஈடுகட்டும் நோக்கத்தில் இத்தகைய செயலைப் புரிந்த முகேஷ் அம்பானி ஊதியத் தொகை மட்டுமல்லாது, மாத சலுகைப் படிகள், பணி ஓய்வு நலன்கள், பங்குகள் உள்ளிட்ட எதையுமே பெறவில்லை. மேலும், நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவியில் பணியாற்றுவதற்காகவும் எந்த ஊதியத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஊதிய உயர்வும் இல்லை

இவர் கடந்த 11 ஆண்டுகளாகவே, ஊதிய உயர்வு எதுவும் செய்யாமல், தொடர்ந்து 11 ஆண்டுகளாக ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக பெற்று வந்துள்ளார். ஊதிய உயர்வும் இல்லாத இந்த சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஊதியத்தொகை வேண்டாம் என விட்டுக் கொடுத்துவிட்டார்.

இதே நிறுவனத்தில், பணியாற்றக்கூடிய இவரது உறவினர்களான ஹைதல் மேஸ்வானி மற்றும் நிகில் போன்றோருக்கான ஊதியமும் மாற்றம் செய்யப்படாமல், அடிப்படை ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்