Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இந்த 9 வாட்ஸ்அப் சேவைகள் பற்றி தெரியும?

KANIMOZHI Updated:
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இந்த 9 வாட்ஸ்அப் சேவைகள் பற்றி தெரியும?Representative Image.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இந்த 9 வாட்ஸ்அப் வங்கி சேவைகள் குறித்து தெரியும?

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களை ஆன்லைன் மோசடி, தகவல் திருட்டு போன்றவற்றில் இருந்து தடுப்பதிலும் முன்னணியில் உள்ளது. அதன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் மற்றும் மொபைல் சேவைகளை வழங்குகிறது. 

குறிப்பாக எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி சம்பந்தமான பல விசாரணைகளை மேற்கொள்ள உதவுகிறது. எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கைப் பயன்படுத்த  ஸ்மார்ட் போனில் QR கோடை ஸ்கேன் செய்தாலே போதும், எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய 9 சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்த முழு விவரங்கள் இதோ... 

 

 

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இந்த 9 வாட்ஸ்அப் சேவைகள் பற்றி தெரியும?Representative Image
  • மினி ஸ்டேட்மெண்ட் (Mini statement)
  • வங்கி கணக்கு இருப்பு (Account balance)
  • ஓய்வூதிய சீட்டு (Pension slip)
  • கடன் திட்டங்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் வட்டி விகிதங்கள் (Information on Loan products  – FAQ and Interest rates)
  • பிக்சட் டெபாசிட்கள் குறித்த முக்கிய தகவல்கள்  மற்றும் வட்டி விகிதங்கள் (Information on Deposit products – Features and Interest rates) 
  • NRI சேவைகள் (NRE கணக்கு, NRO கணக்கு) - அம்சங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் (NRI services (NRE Account, NRO Account) – Features and Interest rates)
  • Insta கணக்குகளை திறப்பது - அம்சங்கள் / தகுதி, தேவைகள் & அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Opening of Insta Accounts - Features /Eligibility, Requirements & FAQ)
  • அங்கீகரிக்கப்பட்ட கடன் திட்டம் குறித்த கேள்விகள் (Pre-approved loan queries)

 

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால், +919022690226  என்ற எண்ணுக்கு "ஹாய்" (Hai) என மெசெஜ் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் எஸ்பிஐ சாட்போட்டில் காண்பிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறுச்செய்தி மூலமாக தகவல்களைப் பெற எஸ்பிஐ வங்கியில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து   “WAREG ACCOUNT NUMBER” +917208933148 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸும் அனுப்பலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்