Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges

Priyanka Hochumin Updated:
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges  Representative Image.

வீட்டுக் கடன் வாங்க நினைக்கும் பலருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும் பொத்து பல கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. அதில் ஒரு சிலவற்றை நேரடியாகவும், சிலவற்றை மறைமுகமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு எவ்ளோ வீட்டுக் கடன் வாங்கலாம் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

கடன் சார்ந்த கட்டணங்கள்,அரசு சார்ந்த கட்டணங்கள் மற்றும் ஆவணம் சார்ந்த கட்டணங்கள் என்று வீட்டுக் கடனுக்கு இருக்கிறது. இந்த பதிவில் இது குறித்த முழு தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges  Representative Image

பரிசீலனைக் கட்டணம் | Processing Fee

வங்கி, நிதி நிறுவனம் அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் பரிசீலனை செய்து நமக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டணம் தான் பரிசீலனைக் கட்டணம். இந்த தொகை ஒவ்வொரு வங்கி அல்லது நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக

  • கடன் தொகையில் இவ்ளோ சதவீதம் தர வேண்டும் அல்லது
  • கடன் தொகையில் இவ்ளோ தொகை செலுத்த வேண்டும் அல்லது
  • எவ்ளோ கடன் வாங்கினாலும் குறைந்த பட்ச தொகை இவ்ளோ மற்றும் அதிக பட்ச தொகை இவ்ளோ என்று நிர்ணயம் செய்வார்கள்.

எனவே, வீட்டுக் காண கடன் வாங்குவதற்கு முன்பே பரிசீலனைக் கடன் எவ்ளோ என்று விசாரித்துக் கொண்டு

தொகையை தீர்மானம் செய்வது நல்லது. மேலும் மாத சம்பளம் சம்பாதிப்பவர்களை விட சுய தொழில் செய்பவர்களுக்கு பரிசீலனைக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பரிசீலனைக் கட்டணத்திற்கு 18% ஜி.எஸ்.டி வரியும் இருக்கிறது. அதனால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பண்டிகை நாட்களில் பரிசீலனைக் கட்டணங்களை குறைத்தும், தள்ளுபடி செய்தும் வடிக்கையாளர்களுக்கு உதவுகின்றனர். ஒருவேளை வீட்டுக் கடன் வழங்கப்படுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், இந்திய வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப பரிசீலனைக்காக வாங்கிய தொகையில் ஒரு பகுதியை திரும்ப தர வேண்டும்.

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges  Representative Image

வழக்கறிஞருக்கு கட்டணம் | Legal Opinion Charges for Home Loan

வீட்டுக் கடன் வாங்குபவர்களின் சொத்து பாத்திரத்தை அடிப்டையாகக் கொண்டு தான் வங்கிகள் கடன் தருகின்றனர். அந்த சொத்தில் ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறதா என்று ஆவணங்கள், வில்லங்கம், பட்டா உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்து வழக்கறிஞர் சட்ட கருத்து தெரிவிக்க வேண்டும். அவர் கடன் தரலாம் என்று சொன்னால் மட்டுமே வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கடனை வழங்குவார்கள். இதற்கு அதிககட்டணம் வாங்கப்பட்ட மாட்டாது.

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges  Representative Image

புரோக்கர் அல்லது தரகர் கமிசன் | Broker Fee

புது வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு இது தேவைப்படாது. ஆனால் தனிநபர்களிடம் இருந்து பூர்வீக வீட்டை அல்லது பழைய வீட்டை வாங்கும் போது அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அது நாம் வாங்கும் வீட்டில் இருந்து 2% புரோக்கருக்கு தர வேண்டும்.

பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் | Deed Registration & Stamp Fee

ஏதேனும் புது மனை அல்லது வீடு வாங்கும் போது அதனை பத்திரப்பதிவு செய்வது வழக்கம். எனவே, அதற்காக சொத்தின் மதிப்பில் 4% பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் 7% முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். நாம் மனை வாங்குவதை விட பத்திரப்பதிவுக்குத் தான் செலவு அதிகம் செய்யும் நிலை உள்ளது.

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges  Representative Image

சொத்து அடமான பதிவுக் கட்டணம் | Property Mortgage Registration Fee

நம்முடைய அவசர தேவைக்காக வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திடம் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியிருப்போம். இந்த விவரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் [Memorandum of Deposit of Title Deed MOD] பதிவு செய்யும் கட்டணத்தை கடன் வாங்குபவர்கள் தான் தர வேண்டும். இது எதற்காக என்றால், கடன் வாங்கியவர்கள் அடமானம் வைத்த சொத்தை வங்கிக்கு தெரியாமல் வேற யாரிடமும் விற்பதை தவிர்ப்பதற்காக என்று கூறப்படுகிறது. இதற்கு பதிவுக் கட்டணமாக 1% மற்றும் முத்திரைத்தாள் கட்டணமாக 0.5% என்று செலுத்த வேண்டும்.

காப்பீடு பிரீமியம் | Insurance Premium

வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் கடனாக வாங்கும் தொகைக்கு ஏற்ப ஆயுள் காப்பீடு (Term Plan Insurance) மற்றும் சொத்துக் காப்பீடு (Term Insurance) எடுக்க வேண்டியது கட்டாயம். எதற்காக இந்த கட்டணம் அவசியம் எனில், கடன் வாங்கியவருக்கோ அல்லது இயற்கையால் வீட்டிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ இந்த காப்பீடு கைக்கொடுக்கும்.

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த கட்டணங்கள் இருக்கான்னு பாத்துக்கோங்க | Home loan charges  Representative Image

வருமான வரிச் சான்றிதழ் கட்டணம் | Income Tax Certificate Fee

மாத சம்பளம் வாங்குபவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களின் வருமான வரிச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டியது அவசியம். இது அவர்கள் நாட்டிற்கு கட்ட வேண்டிய வரியை தீர்மானிக்கிறது. அப்படி இருக்கையில் நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி அதற்கு மாத தவணை காட்டுகிறீர்கள் என்றால் அதனை வருமான வரிச் சான்றிதழில் சேர்த்து வரியை குறைக்கலாம். இந்த வரிச் சலுகையை பெற நிதியாண்டில் நாம் கட்டிய அசல் தொகை மற்றும் வட்டி குறித்த விரிவான அறிக்கை ஒன்றை வங்கியிடம் கோரிக்கை வைக்கவும். அவர்கள் அதனை மெயில் அல்லது நேரில் வந்து வாங்கிக்கொள்ள கேட்பார்கள். இதற்கு பெரும்பாலும் தொகை எதுவும் வாங்குவது இல்லை. இருப்பினும் ஒரு சில நிறுவனங்களில் வெறும் ரூ. 100/- முதல் ரூ. 500/- வரை கட்டணம் வசூலிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்