Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்வ மகள் சேமிப்பு திருவிழா.. இன்றே தொடங்குங்க.. உங்க செல்ல மகளின் எதிர்காலத்திற்காக

Gowthami Subramani September 19, 2022 & 14:40 [IST]
செல்வ மகள் சேமிப்பு திருவிழா.. இன்றே தொடங்குங்க.. உங்க செல்ல மகளின் எதிர்காலத்திற்காகRepresentative Image.

தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், செல்வ மகள் சேமிப்புத் திருவிழா நடைபெற இருப்பதாக தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரான பொன்னையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது, இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். இதற்கு ரூ.250 செலுத்த வேண்டும்.

அதன் படி, ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயும், அதிகபட்ச தொகையாக 1.50 லட்சம் வரையிலும் செலுத்தலாம்.

மேலும், இதற்கான வட்டி 7.6 சதவீதமாகும். கணக்கில் செலுத்தக் கூடிய தொகையின் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்திற்கும், பெற்றோர்கள் வருமான வரிவிலக்கு பெறலாம்.

இவ்வாறு பெற்றோர்கள் சேமித்து வைக்கும் சேமிப்புக் கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை 10 ஆம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் 50% சதவீத தொகையை மேற்படிப்பிற்காகப் பெறலாம்.

முழுத் தொகையை, பெண் குழந்தையின் திருமணத்தின் போது எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்புத் திருவிழா வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்