Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

Share Market News in Tamil: எவ்வளவு பெரிய லாபம்? பங்கு சந்தையில் லாபம் கண்ட 10 இந்தியா நிறுவனங்கள்..... 

Manoj Krishnamoorthi May 17, 2022 & 11:45 [IST]
Share Market News in Tamil: எவ்வளவு பெரிய லாபம்? பங்கு சந்தையில் லாபம் கண்ட 10 இந்தியா நிறுவனங்கள்..... Representative Image.

நேற்று திங்கட்கிழமை பங்கு சந்தை நிலவரம் , சென்செக்ஸ் 180.22 புள்ளிகள் அல்லது 0.34% உயர்ந்து 52,973.84 ஆகவும், நிஃப்டி 50 (Nifty 50) 60.15 புள்ளிகள் சேர்த்து 15,842.30 ஆகவும் முடிவடைந்தது.  இந்திய குறியீடுகளில் ஐடி பங்குகளில் ஏற்பட்ட இழப்புகள் யாவும் வங்கி மற்றும் ஆட்டோ ஸ்கிரிப்களில் ஏற்பட்ட லாபத்தால் ஈடுசெய்யப்பட்டது  உள்ளதாக திங்களன்று (16.05.2022) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு சந்தை ஏற்றம் நிறைய நிறுவனத்துக்கு அசுர வளர்ச்சி அளித்துள்ளது, அதில் 10 முன்னணி நிறுவனத்தின் இன்றைய பங்கு நிலவரத்தைக் (Share Market News in Tamil) காண்போம்.

1.GlaxoSmithKline Pharma

நான்காவது காலாண்டின் செயல்பாடுகளால் ₹55 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை  சந்தித்ததாக  GlaxoSmithKline Pharmaceuticalsநேற்று  திங்களன்று அறிவித்தது, அத்துடன் 2020-21 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் முதற்காலாண்டில் மருந்து நிறுவனம் ₹4 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

2.Raymond

மார்ச் 2022 இல் ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் முடிவடைந்தில், இந்த வருடம் நான்கு மடங்கு நிகர லாபம் உயர்ந்து ₹264.97 கோடியாக மாறியுள்ளது எனத் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது, இந்த காலகட்டத்தில் ஒரு உற்சாகமான தேவை மற்றும் வலுவான நுகர்வோர் உணர்வுகளைப் பூர்த்தி செய்ததே லாபத்தின் முக்கியக் காரணமாகும்.

3.Greenply Industries

Plyboard தயாரிப்பில் பெரும் நிறுவனமான Greenply Industries Ltd, கடந்த ஆண்டு மார்ச் 2022 இல் முடிவடைந்த நான்காவது காலாண்டில், அதிக வருவாய்க்கு மத்தியில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவீதம் உயர்ந்து ₹29 கோடியாக உயர்ந்துள்ளது என அறிவிப்பு வந்துள்ளது.

4.IRB Infrastructure

மார்ச் மாதத்தில் ₹306.66 கோடியாக இருந்த இன்ஃப்ரா நிறுவனத்தின் டோல் வசூல் நேற்றைய நிலவரத்தின்படி ஏப்ரல் மாதத்தில் ₹327 கோடியாக உயர்ந்துள்ளது.

5.Century Plyboards 

இந்திய நிறுவனமான செஞ்சுரி ப்ளைபோர்டுகள் (இந்தியா) லிமிடெட் மார்ச் 2022 இல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 2.08 சதவீதம் அதிகரித்து ₹88.75 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பு மார்ச் காலாண்டில், செஞ்சுரி பிளைபோர்டுகள் BSE தாக்கல் செய்தது என்றும் அறிவித்துள்ளது.

6.Aditya Birla Capital

ஆதித்யா பிர்லா சன் லைஃப் மற்றும் அதன் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் விசில்ப்ளோவர் புகார் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறியது. ஆனால் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன விசாரணையில் புகாரில் எந்த தகுதியும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது கவனிக்கப்பட வேண்டியதாகும். 

7.Elgi Equipments

ஏர் கம்ப்ரஸர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், 2021-22 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ₹73.1 கோடி வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிறுவனம் ₹43.4 கோடி பிஏடியை ஈட்டியது நினைவுக்கோர வேண்டியதாகும்.

8.SJVN

அரசுக்கு சொந்தமான SJVN லிமிடெட் நேபாளத்தில் ₹4,900 கோடி மதிப்பில் அருண்-4 என்ற மற்றொரு நீர் மின் திட்டத்தை உருவாக்கவுள்ளது என்றும், நேபாளத்தில் 490 மெகாவாட் திறன் கொண்ட அருண்-4 ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேபாளத்தின் லும்பினியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா  கையெழுத்து செய்து கொண்டதாக திங்களன்று  அறிக்கை வெளிவந்த்து.

9.KEC Internatioanal

நேற்று திங்கட்கிழமை பங்கு சந்தை நிலவரத்தின் அடிப்படையில்  KEC Internatioanal நிறுவனம் ₹1,150 கோடி  மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது,

10.VIP Industries

இந்த நிறுவனம் Q4FY21 இல் இருந்த்  ₹4 கோடி நஷ்டத்திற்கு எதிராக உழைத்து Q4FY22 இல் ₹12 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்... 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்