Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TATA Buys Ford Company: டாடா நிறுவனத்தின் வெற்றி…! அடுத்த டார்கெட் ஃபோர்டு ஆலை….!

Gowthami Subramani May 29, 2022 & 18:55 [IST]
TATA Buys Ford Company: டாடா நிறுவனத்தின் வெற்றி…! அடுத்த டார்கெட் ஃபோர்டு ஆலை….!Representative Image.

TATA Buys Ford Company: இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமான டாடா நிறுவனம் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புது கண்டுபிடிப்புகள், வாகன தொழில் நுட்பங்கள், வாகன அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் ஏராளக்கணக்கான காப்புரிமையைத் தாக்கல் செய்துள்ளது.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றிலேயே முதல் முறையாக 125 காப்புரிமைகளை ஒரே ஆண்டில் தாக்கல் செய்தது டாடா நிறுவனம். அது மட்டுமல்லாமல், இது வரை தாக்கல் செய்யப்பட்ட 125 காப்புரிமைகளில் 56 காப்புரிமைகளுக்கு, 2021-22 நிதியாண்டில் ஒபுதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது (TATA Patents 2022). மேலும், இந்திய ஆட்டோமொபைல் துறையிலேயே வேறு எந்த நிறுவனமும், ஒரே ஆண்டிலேயே இத்தனை காப்புரிமைகளை தாக்கல் செய்தது இல்லை எனக் குறிப்பிடுகிறது (Did TATA Buy Ford).

அடுத்த டார்கெட்

இந்த மாபெரும் சாதனையைப் படைத்தது மட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்தின் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையைக் கைப்பற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். (TATA Ford News)

கடந்த ஆண்டு, ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஃபோர்டுக்கு சொந்தமான ஆலைகள் சென்னை மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ளன (TATA Buy Ford Chennai Plant).

இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலம் சனந்தில் இருக்கும் ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சைப்பற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இதற்கு குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், குஜராத் முதல்வரின் தலைமையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் ஃபோர்டு ஆலைகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது (TATA Buy Ford Plant in India).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்