Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இந்த வங்கிக்கெல்லாம் வாட்ஸ் அப் சேவைகளைப் பயன்படுத்தலாம்…! எப்படி தெரியுமா..?

Gowthami Subramani [IST]
இனி இந்த வங்கிக்கெல்லாம் வாட்ஸ் அப் சேவைகளைப் பயன்படுத்தலாம்…! எப்படி தெரியுமா..?Representative Image.

நவீன டிஜிட்டல் முறையில் சேவைகளைத் தொடங்குவதற்கு பெரும்பாலும் எல்லா துறைகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், SBI, HDFC, ICICI Bank, Axis Bank மற்றும் Bank of Baroda உள்ளிட்ட அனைத்து முன்னணி வங்கிகளும், வங்கி வாடிக்கையாளர்கள் பயன்பெறும் நோக்கத்தில் சுலபமான பண பரிவர்த்தனை முறை செய்ய திட்டமிட்டுள்ளது. எந்த வங்கிகள் இந்த வாட்ஸ் அப் பயன்பாட்டைப் பயன்படுத்துகின்றன.? மேலும், இந்த சேவை குறித்த முக்கிய தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.

டிஜிட்டல் முறை பயன்பாடுகள்

வங்கியைப் பொறுத்த வரை, நாம் ஏராளமான நடைமுறைப் பயன்பாடுகளைக் கண்டு வருகிறோம். வங்கிக்குச் சென்று பல மணி நேரம் நின்று நாம் நமக்குத் தேவையானவை எல்லாம் பெறுவது மாறி, தற்போது ஆன்லைன் பேங்கிங்கை அதிக அளவில் உபயோகித்து வருகிறோம். அந்த வகையில், வாட்ஸ் அப் பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் செயலி ஆகும்.

வாட்ஸ் அப் பேங்கிங்

24 மணி நேரமும், எந்த வித இடையூறும் இல்லாமல், வங்கிச் சேவைகளை நாம் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் பேங்கிங், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இத்துடன், தற்போது வாட்ஸ் அப் பேங்கிங் வசதியும் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

அதாவது, நம்முடைய வாட்ஸ் அப் மூலம் எப்போது வேண்டுமானாலும், யாருக்கு அனுப்ப வேண்டும் என்றாலும், உடனடியாக பணம் அனுப்ப முடியும். அந்த வகையில், தற்போது SBI, HDFC, ICICI, Axis Bank மற்றும் Bank of Baroda உள்ளிட்ட வங்கிகள் வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்தி, வங்கி பயன்பாடுகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு பதிவு செய்து உபயோகிக்கலாம் என்ற முழு விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.

எஸ்பிஐ வாட்ஸ் அப் பேங்கிங்

SBI வங்கி, சமீபத்தில் தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவை மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் தொகையைப் பார்க்க முடியும். மேலும், Mini Statement-ஐப் பெற முடியும்.

இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் 90226 90226 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த வாட்ஸ் அப் வங்கி சேவையைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஐசிஐசிஐ வாட்ஸ் அப் பேங்கிங்

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பயன்பெரும் வகையில், 365 நாள்களும், 24/7 என்ற கணக்கில் வங்கி மூலமாக அனைத்து வங்கி சேவைகளையும் பெறுவதற்கான வசதியை அளித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் செல்லாமலே, வங்கி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதனுடன், Instasave-ஐ பயன்படுத்துவதன் மூலம், நிலையான வைப்புத் தொகை, ஆன்லைன் ஷாப்பிங் செய்தல், பில்கள் கட்டுதல் உள்ளிட்டவற்றைச் செய்ய முடியும். மேலும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்புக், செக் புக் உள்ளிட்டவற்றையும் பெற முடியும்.

Axis Bank வாட்ஸ் அப் பேங்கிங்

Axis வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்களும், இனி வங்கியில் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் வாட்ஸ் அப் வங்கியைப் பயன்படுத்திப் பெறலாம். அதன் படி, Balance Enquiry, Cheque Books, Bank Account, Mini Statement உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இனி வாட்ஸ் அப் மூலம் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

Bank of Baroda வாட்ஸ் அப் பேங்கிங்

அதே போல, பேங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களுக்கும் சமீபத்தில் புதிய டிஜிட்டல் வசதியான வாட்ஸ் அப் பேங்கிங் சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

HDFC வங்கி வாட்ஸ் அப் வங்கி

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு, HDFC Chat Bank மூலம், வாட்ஸ் அப் வாயிலாக சேவையை வழங்க அனுமதிக்கிறது. அதன் படி, எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள், 24 மணி நேரமும், 7 நாள்களிலும் இந்த சேவையைப் பெற முடியும். மேலும், 90-க்கும் மேற்பட்ட வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்வதற்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வசதியை அளித்துள்ளது. இதில் குறிப்பாக, வங்கி வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் மட்டுமே இந்த சேவையைப் பெற முடியும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 70700 22222 என்ற எண்ணைச் சேர்த்து, Hi என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினால், உங்களுக்கான சேவைகளை நீங்கள் பெற முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Whatsapp Banking Services in Tamil | Whatsapp Banking in india | ICICI Whatsapp number | SBI Whatsapp Banking no | E Banking meaning | Whatsapp Banking Services | Whatsapp Banking IDBI | Whatsapp Banking TMB | SBI Whatsapp Banking | Paytm Whatsapp Banking | Which Bank has launched Whatsapp Banking in India | First Bank Whatsapp Banking | Bank of india Whatsapp number balance check | Yes Bank Whatsapp Banking | Whatsapp Banking Kotak | Whatsapp Pay India | Which Bank has launched Whatsapp Banking in india | Whatsapp Banking Number | Whatsapp Banking Features | How to Use Whatsapp Banking | What is Whatsapp Banking | Whatsapp Banking benefits | Whatsapp Banking launched by Which Bank | SBI Whatsapp Banking Services | Axis Bank Whatsapp Banking Services | ICICI Whatsapp Banking Services | Banking Services Through Whatsapp | Axis Bank Partner Whatsapp to Offer Basic Banking Services


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்