Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

50 வயசுக்கு மேல நமக்கு யார் லோன் தருவா? அப்படி இல்ல கண்டிப்பா தருவாங்க | Home loan for senior citizens

Priyanka Hochumin Updated:
50 வயசுக்கு மேல நமக்கு யார் லோன் தருவா? அப்படி இல்ல கண்டிப்பா தருவாங்க | Home loan for senior citizens Representative Image.

உலகில் வாழும் அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலான ஆசை தங்களுக்கென்ற சொந்த வீடு வேணும் என்பது தான். அதில் ஒரு சில பேருக்கு 30 வயதிற்குள் புது வீடு அமையும், ஆனால் சிலருக்கு அமையாது. காரணம் பிள்ளைகளுக்கு படிப்பு செலவு, திருமண செலவு, மருத்துவ செலவு இப்படி ஏகப்பட்டது இருக்கிறது. அதையும் தாண்டி புது வீடு வேண்டும் என்று நினைத்தால் 50 வயது ஆகிவிடும். அப்போது வங்கியில் லோன் கேட்டால் தர மறுத்துவிடுவார்கள்.

50 வயசுக்கு மேல நமக்கு யார் லோன் தருவா? அப்படி இல்ல கண்டிப்பா தருவாங்க | Home loan for senior citizens Representative Image

இந்த திட்டத்தில் கிடைக்கும்...

ஆனால் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், 50 Plus என்னும் திட்டத்தின் கீழ் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குகிறது. இருப்பினும் இதில் இருக்கும் முக்கிய நிபந்தனையே வீட்டுக் கடன் வாங்கும் நபர் பென்ஷன் வாங்குபவராக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு ஊழியராக இருக்க வேண்டும். அப்படி இந்த லோன் வாங்கினால் சுமார் 20 ஆண்டுகள் அதாவது அவர்களுக்கு 70 வயதிற்குள் திரும்பக் குடுக்கலாம். நீங்கள் வீடு காட்டுவதாக இருந்தால் அதற்கான செலவில் 85% வரையும், இதுவே புது வீடு வாங்குவதாக இருந்தால் 80% வரையும் அளிக்கப்படும்.

 

50 வயசுக்கு மேல நமக்கு யார் லோன் தருவா? அப்படி இல்ல கண்டிப்பா தருவாங்க | Home loan for senior citizens Representative Image

எங்கு எவ்ளோ கிடைக்கும்!

ஓய்வு ஊதியம் வாங்குபவர்களுக்கு தாராளமாக கடன் தர வங்கிகள் தயாராக இருக்கிறது. அதில் எந்தெந்த வங்கியில் வீட்டுக் கடன் தருகிறார்கள் என்று பார்க்கலாம்.

எள்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்: இந்நிறுவனம் 50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு லோன் தருகிறது. மேலும் இந்த கடனை 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் திரும்ப கட்ட அனுமதிக்கிறது.

எஸ்.பி.ஐ: வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோர் 70 வயது வரையில் வாங்க முடியும் மற்றும் 75 வயது வரை கடனை அடைக்க அனுமதிக்கிறது. சரி எந்த அடிப்படையில் கடன் தரப்படுகிறது என்றால்? கடன் தொகை, கடனை திரும்பச் செலுத்தும் தகுதி மற்றும் கடன் வாங்குவோரின் வரலாறு (அதாவது இதற்கு முன்னர் கடன் வங்கியிருக்கிறார்களா அல்லது சரியாக வட்டி தருகிறார்களா) ஆகியவற்றின் அடிப்படையில் கடன் நிர்ணயிக்கப்படுகிறது. இதே விதிமுறைகளுடன் தான் ஸ்டேட் ஆஃப் இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது.

பேங்க் ஆஃப் பரோடா: இங்கு 50 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரையில் வீட்டுக் கடன் வாங்க முடியும். கடனை திரும்ப செலுத்தும் தகுதி 78 வயது வரை தரப்படுகிறது. இதே போல் பி.என்.பி ஹவுசிங் ஃபைனான்ஸ் கடன் வாங்க 70 வயது வரைக்கும், கடனை திரும்பத் தர 75 வயது வரையும் அனுமதிக்கிறது.

50 வயசுக்கு மேல நமக்கு யார் லோன் தருவா? அப்படி இல்ல கண்டிப்பா தருவாங்க | Home loan for senior citizens Representative Image

ரிஸ்க் தான் ஆனாலும் தர காரணம்...

பொதுவாக வங்கியில் ஏன் 50 வயதிற்கு மேலானவர்களுக்கு கடன் தர மறுக்கிறார்கள் தெரியுமா? அவர்களுக்கு வருமானம் இல்லை மற்றொன்று உடல்நலக் குறைவு காரணங்கள். இருப்பினும் வங்கியில் இவர்களுக்கு கடன் தர காரணம், ஒன்று - மனை மற்றும் வீட்டை அடமானம் வைப்பது, மற்றொன்று - பென்ஷன் அல்லது ஏதேனும் வருமானம் வந்து கொண்டிருக்கணும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்