Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Agneepath Issue in Tamil: அக்னிபாத் திட்டம் என்றால் என்ன? வீரர்கள் இதை எதிர்ப்பதற்கான காரணம்… முழு விவரங்களும் இதோ…!

Gowthami Subramani June 17, 2022 & 13:55 [IST]
Agneepath Issue in Tamil: அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?  வீரர்கள் இதை எதிர்ப்பதற்கான காரணம்… முழு விவரங்களும் இதோ…!Representative Image.

Agneepath Issue in Tamil: இராணுவத்துறையில், அக்னிபாத் திட்டம் என்ற திட்டத்தின் மூலம், இராணுவ வீரர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இந்த திட்டத்தை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் புதிய குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான கொள்கையினை மத்திய அரசு வெளியிட்ட சில மணி நேரத்திலேயே இதன் நம்பகத்தன்மை மற்றும் இராணுவ வேலையில் சேர நினைப்பவர்களின் கவலைகள் போன்றவற்றை நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம் (Agneepath Issue in Tamil).

அந்த வகையில், மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டத்தையும், ராணுவ வீரர்கள் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணத்தையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

அக்னிபாத் திட்டம் (What is Agneepath Scheme)

Tour of Duty என்ற புதிய வேலைவாய்ப்பு முறை தான் அக்னிபாத் என பெயரிடப்பட்டுள்ளது (What is Agneepath Scheme in Military Service?).

அக்னிபாத் திட்டம் என்பது ராணுவப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளிலும் குறுகிய கால சேவையில் பணியாட்களை நியமிப்பதாகும். இந்தத் திட்டத்தின் படி, 17.5 வயது மேல் 21 வயதுக்குட்பட்ட இருபாலரும் பணிகளில் தேர்ந்தெடுக்கப்படுவர் (Agneepath Scheme in Tamil).

தற்போது ஆயுதப்படைக்குத் தேர்வு செய்யப்படுவதற்கான கல்வித் தகுதியே இந்த அக்னிபாத் திட்டத்திலும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் (What is Agniveer Scheme). மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியின் சேரும் நபர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர் (What is Agniveers).

25% அக்னி வீரர்களுக்கு மட்டுமே நிரந்த பணி வழங்கப்படுதல் (Agniveer scheme eligibility criteria)

இவ்வாறு அக்னிபாத் திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் 4 ஆண்டு காலங்கள் ஒப்பந்த முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன் படி, 4 ஆண்டு காலத்திற்குப் பிறகு, 25% அக்னி வீரர்கள் மட்டுமே நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவர் (Agniveer Eligibility criteria). இவர்களுக்கு மட்டுமே நிரந்தர பதவி காலமாக 15 வருட கால ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவர். மீதமுள்ள 75% அக்னி வீரர்களுக்கு சேவா நிதி வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவர் (Agniveer scheme details in Tamil).

ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது

இவ்வாறு அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால், ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது. அதனைத் தொடர்ந்து இதில் பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் (Agneepath Scheme).

அதனைத் தொடர்ந்து உயிரழப்பு ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், பணி சமயத்தில் காயமடைந்தவர்களுக்கு காயத்தைப் பொறுத்து அவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மாறப்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டது (How to apply for agniveer scheme).

மத்திய அரசின் நோக்கம்

அதன் படி, பணியின் போது காயமடைந்து 50 சதவீத மாற்றுத்திறனாளியானால், ரூ. 15 லட்சமும், 75 சதவீதம் மாற்றுத் திறனாளியானால் ரூ.25 லட்சமும், 100 சதவீத மாற்றுத்திறனாளிக்கு ரூ.44 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும். இவ்வாறு அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் இருப்பதால், தொகை சேமிக்கப்படும் எனவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது (Is Agneepath Scheme Flopped in 2022?).

மேலும், வேலைவாய்ப்பு அளிப்பதாக இருப்பினும் ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைக் குறைக்கவே இந்தத் திட்டம் தொடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது ஏன்? (Why Agneepath Scheme opposes in Military Services)

இந்தத் திட்டத்தின் கீழ், பணியில் சேரும் நபர்கள் தேசப்பற்று, ராணுவம் மீதான புரிதல், மற்றும் இளைஞர்களின் ஒழுக்கம் போன்றவை நன்றாக இருப்பினும், இதில் 25% இளைஞர்கள் மட்டுமே நிரந்தர பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர் (Agniveer Agneepath Recruitment Scheme 2022). மீதமுள்ள 75% வீரர்கள் வெளியே அனுப்பி வைக்கப்படுவர். தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஆட்சேர்ப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரியும் நபர்கள் அவர்களது ஓய்வுக் காலத்தில் செக்யூரிட்டி பணிக்காகச் செல்லும் சூழலே ஏற்பட்டுள்ளது.

பணியில்லாத நிலை

இந்த நிலையில், 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட நபர்கள் பணிக்குச் சென்ற பிறகு, நான்கு வருடங்கள் கழித்து வெளியே அனுப்பப்பட்டால் அவர்களின் நிலைமை என்ன ஆகும்? அடுத்து அவர்கள் வேறு எந்தப் பணியைத் தேர்ந்தெடுப்பார்கள்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு மத்தியிலே இந்த அக்னிபாத் திட்டம் உள்ளது (How to Apply Agneepath Scheme).

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்த போதே, மேலே கூறப்பட்டவாறு பல்வேறு கேள்விகளை எழுப்பி ராணுவத்தில் நிரந்தப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

மேற்கல்விப் படிப்பைத் தொடங்க முடியாத நிலை

இவ்வாறு குடும்ப சூழல் காரணமாக, சிறு வயதிலேயே ராணுவத் துறையில் சேர விரும்புபவர்கள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வாறு உயர்படிப்பைத் தொடங்க முடியும். ராணுவத்தில் சேர்க்கப்படும் நபர்கள் இவ்வாறு மேற்கல்விப் படிப்பைத் தொடங்க முடியாமல் போனால், எவ்வாறு உயர் பொறுப்புகளில் அவர்கள் இருக்க முடியும்? மேலும், அவர்களின் சமூக படிநிலைகளும் உடையும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுகிறது.

நாட்டின் பாதுகாப்பற்ற நிலை

குறிப்பாக, ஆயுதப்படையில் அனுபவமற்ற இளைஞர்களைப் பணியின் சேர்க்கும் போது, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது. மேலும், ராணுவத்தில் புதிதாக ஒரு நபர் சேர்ந்து அவர் தகுதியுடைய நபராக மாறுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை நேரம் தேவைப்படும்.

ஆனால், அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்களின் பணிக்காலம் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டுமே. இந்த நிலையில் எவ்வாறு ஒரு நபர் தகுதியுடைய வீரராக மாற முடியும். இப்படி இருக்கும் பட்சத்தில் போர் சூழல் ஏற்பட்டால், எவ்வாறு வலிமையான வீரர்களைக் கொண்ட ராணுவப் படையை உருவாக்க முடியும் போன்ற பல்வேறு கேள்விகள் நம்மை அச்சுறுத்துகின்றனர். இவை அனைத்தும் முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆகும்.

அதிலும் குறிப்பாக, 4 ஆண்டுகளுக்குப் பின் பணியிலிருந்து வெளியேறும் நபர்கள் மன உளைச்சலுக்கு ஆவார்கள். மேலும், இவர்கள் 25 வயதிலேயே வேலையில்லாத நிலைக்குத் தள்ளப்படுவர். இது போன்ற பல்வேறு காரணங்களினாலேயே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்படுவது எதிர்க்கப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்