Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10வது படித்திருந்தால் போதும்.. Air India நிறுவனத்தில் சூப்பரான வேலை.. | How To Apply AIATSL Recruitment 2023 Online Tamil

Nandhinipriya Ganeshan Updated:
10வது படித்திருந்தால் போதும்.. Air India நிறுவனத்தில் சூப்பரான வேலை.. | How To Apply AIATSL Recruitment 2023 Online TamilRepresentative Image.

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (Air India Air Transport Services Limited), வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Customer Service Executive), ஜூனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Jr. Customer Service Executive), ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ்/யூட்டிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர் (Ramp Service Executive/Utility Agent Cum Ramp Driver) மற்றும் ஹேண்டிமேன் (Handyman) ஆகிய 495 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில விவரங்களை இப்பதிவின் மூலம் பெறலாம்.

முக்கிய விவரங்கள்

 

நிறுவனத்தின் பெயர்

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL)

காலிப்பணியிடங்கள்

495

பணியிடம்

சென்னை

நேர்முகத் தேர்வு

17 ஏப்ரல் - 20 ஏப்ரல் 2023 வரை

விண்ணப்பம் ஆரம்பமான நாள்

ஏப்ரல் 05, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஏப்ரல் 28, 2023

அதிகாரப்பூர்வ வலைதளம்

https://aiasl.in

 

பணி விவரம்:

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவியின் பெயர்

பணியிடங்கள்

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி

80

ஜூனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி

64

ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ்/யூட்டிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர்

121

ஹேண்டிமேன்

230

மொத்தம்

495

 

ஊதியம்:

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி

ரூ.25,980/-

ஜூனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி

ரூ.23,640/-

ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ்

ரூ.25,980/-

யூட்டிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர்

ரூ.23,640/-

ஹேண்டிமேன்

ரூ.21,330/-

 

கல்வித்தகுதி

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அந்தந்த துறைக்கேற்ற கல்வி தகுதிகளை கொடுக்கப்பட்டுள்ளன.

 

பணி

கல்வித் தகுதி

வாடிக்கையாளர் சேவை நிர்வாகி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம். ஏர்லைன்/ ஏவியேஷன் பட்டப்படிப்பு அல்லது ஏர்லைன் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை

ஜூனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி

12வது தேர்ச்சி.

ஏர்லைன்/ ஏவியேஷன் பட்டப்படிப்பு அல்லது ஏர்லைன் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை

ராம்ப் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் மெக்கானிக்கல்/எலக்ட்ரிகல்/ உற்பத்தி/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதோ ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும், செல்லுபடியாகும் HMV டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

யூட்டிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர்

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், செல்லுபடியாகும் HMV டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

ஹேண்டிமேன்

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

வயது வரம்பு

AIATSL ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு இருக்க வேண்டும்.

பிரிவு

அதிகபட்ச வயது வரம்பு

Gen

28 Years

OBC

31 Years

SC/ST

33 Years

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • நேர்காணல்
  • வர்த்தகத் தேர்வு (trade test)
  • திறனாய்வு தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படித்துத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்ட தேதியில் குறிப்பிடப்பட்ட பணிகளில் சேர்வதற்கு நேர்காணல் நடைபெறும்.

துறை

நேர்காணல் நடைபெறும் தேதி

Customer Service Executive

ஏப்ரல் 17, 2023

09:00 AM to 12:00 PM

Jr. Customer Service Executive

ஏப்ரல் 18, 2023

09:00 AM to 12:00 PM

Ramp Service Executive

ஏப்ரல் 19, 2023

09:00 AM to 12:00 PM

Utility Agent and Ramp Driver

ஏப்ரல் 19, 2023

09:00 AM to 12:00 PM

Handyman

ஏப்ரல் 20, 2023

09:00 AM to 12:00 PM

 

நேர்க்காணல் நடைபெறும் இடம்: 

மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலகம், 

AI யூனிட்டி காம்ப்ளக்ஸ், 

பல்லாவரம் கண்டோன்மென்ட், 

சென்னை -600043

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்