Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூடைப்பந்து பயிற்சியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு! மாதம் சம்பளம் இவ்வளவா?|Basketball Coach Jobs

Gowthami Subramani Updated:
கூடைப்பந்து பயிற்சியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு! மாதம் சம்பளம் இவ்வளவா?|Basketball Coach JobsRepresentative Image.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூடைப்பந்து பயிற்சியாளர்களுக்கு ஓர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “விளையாடு இந்தியா” (KHELO INDIA) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை கூடைப்பந்து பயிற்சிக்கான “SDAT – விளையாடு இந்தியா மாவட்ட மையம்” ஈரோடு வ.உ.சி பூங்கா மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில், 30 முதல் 100 வரையிலான விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில், பயிற்சியாளராக சேர்ந்து பயிற்சி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் படி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி வழங்கும் நபர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள், ஊதிய விவரங்கள் உள்ளிட்டவற்றை இதில் காண்போம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

பணியின் பெயர்

கூடைப்பந்து பயிற்சியாளர்

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

டிசம்பர் 21, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜனவரி 03, 2023 மாலை 5 மணி

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

வயது வரம்பு

இதில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

கூடைப்பந்து பயிற்சியாளர்

அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்

 

தகுதிகள்

கூடைப்பந்து பயிற்சியாளராக விரும்புவோர், கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

✤ ஈரோடு மாவட்ட வ.உ.சி பூங்கா விளையாட்டரங்கத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்குபவர்கள், தேசிய அளவில் சாதனை படைத்த கூடைப்பந்து வீரர் / வீராங்கனைகளுள் ஒருவராக இருக்க வேண்டும்.

✤ விண்ணப்பதாரர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போதும் ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

✤ சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

ஊதியத்தொகை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கூடைப்பந்து பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு வழங்கப்படும் ஊதியத்தொகை விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

துறை

ஊதியத்தொகை / மாதம்

கூடைப்பந்து பயிற்சியாளர்

11 மாதங்களுக்கு மாதாந்திர ஊதியத் தொகையாக ரூ.18,000 வழங்கப்பட உள்ளது

 

குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ள பயிற்சியாளருக்கான பணி, நிரந்தர பணி அல்ல. இது முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில், வேலைவாய்ப்பு சலுகையோ, நிரந்தரப் பணியோ கோர இயலாது.

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்கள், தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

✤ பயிற்சியாளராக பயிற்சி வழங்க உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு, ஈரோடு வ.உ.சி பூங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.

✤ உடற்தகுதி, விளையாட்டுத் திறன், விண்ணப்பதாரர்கள் பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில், தேர்வு நடைபெறும்.

✤ தேர்வு தேதி மற்றும் அதற்கான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த கூடைப்பந்து பயிற்சியாளராக சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்: https://www.sdat.tn.gov.in/

இந்த இணையதளத்தின் வழியாக பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்