Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12வது படித்திருந்தால் போதும்.. ரூ.81100 சம்பளத்தில் சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை.. | BSF Head Constable Recruitment 2023

Nandhinipriya Ganeshan Updated:
12வது படித்திருந்தால் போதும்.. ரூ.81100 சம்பளத்தில் சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை.. | BSF Head Constable Recruitment 2023Representative Image.

எல்லைப் பாதுகாப்பு படையில் (Border Security Force - BSF) காலியாக உள்ள 247 Head Constable பணிக்கான அறிவிப்பை வெளியாகியுள்ளது. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பதவிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, கடைசித் தேதி என அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அற்புதமான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

இந்த பணிக்கு புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்திய முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு ஆன்லைன்/ஆஃப்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து பயனடையுங்கள்.

BSF Head Constable Recruitment 2023 முழு விபரம்:

நிறுவனத்தின் பெயர்: எல்லைப் பாதுகாப்பு படை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை வாய்ப்பு

பதவியின் பெயர்: Head Constable (Radio Operator/Radio Mechanic)

மொத்த காலியிடங்கள்: 247

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: வயது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 25 ஆக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25500 முதல் ரூ.81100 வரை ஊதியம் வழங்கப்படும்.

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்/ஆஃப்லைன்

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினர் ரூ.150/- செலுத்த வேண்டும். மேலும், SC/ST and Ex-Serviceman பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bsf.gov.in/

தேர்வு செய்யப்படும் முறை:

  • எழுத்துத் தேர்வு, 
  • திறன் தேர்வு, 
  • சான்றுகள்/ஆவணங்களைச் சரிபார்த்தல், 
  • உடல் தரத்தை அளவிடுதல் (பிஎஸ்டி), 
  • விரிவான மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பத்தாரர் முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://bsf.gov.in/-க்கு செல்லவும். BSF Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து BSF Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். 
  • பிறகு தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும். 
  • அனைத்து விபரங்களையும் முடித்த பிறகு மீண்டும் ஒருமுறை சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: 

ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கான அறிவிப்பு ஏப்ரல் 22 ஆம் தேதி 2023 வெளியிடப்பட்டது. எனவே, விண்ணப்பத்தாரர் மே 12, 2023 அன்றுக்குள் விண்ணப்பித்துவிட வேண்டும். 

எல்லைப் பாதுகாப்புப் படை முகவரி:

HQRS DG BSF,

10 CGO COMPLEX,

LODHI ROAD,

NEW DELHI-Delhi – 110003


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்