Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs Today in Tamil: ஜூலை 05, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani July 05, 2022 & 15:30 [IST]
Current Affairs Today in Tamil: ஜூலை 05, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs Today in Tamil: ஜூலை மாதம் 5 ஆம் நாளின் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்கள், இதைக் கண்டிப்பாக அறிந்து கொள்ளவும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே வெற்றி

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

No – Confidence Motion - நம்பிக்கையில்லா தீர்மானம்

Confidence Motion - நம்பிக்கை தீர்மானம்

ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 40

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆதரவாக 15 எம்எல்ஏ-க்கள்

சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு

ஜூலை 04 ஆம் நாள் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் ரூ. 1.25 லட்சம் கோடியில் 60 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டனர். இதன் மூலமாக, 74ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ராம்ராஜ் காட்டன் ரூ.1,000 கோடியில் ஜவுளி உற்பத்திக்காக, முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஜூலை 05 2022

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 50 எம்பிக்கள் முன் மொழியவும், 50 எம்பிக்கள் ஆதரிக்கவும் வேண்டும்.

துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 20 எம்பிக்கள் முன் மொழியவும், 20 எம்பிக்கள் ஆதரிக்கவும் வேண்டும்.

அதே போல, ஒரு எம்பி ஒரு வேட்புமனுவைத்தான் முன்மொழிய வேண்டும்.

ஒரு வேட்பாளர், 4 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். டெபாசிட் தொகையாக ரூ.15,000 செலுத்த வேண்டும்.

இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில், எம்பிக்களும், எம்எல்ஏக்களும் வாக்களிப்பர். இதனால், நாட்டின் பல இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்பிக்கள் மட்டும் தான் வாக்களிப்பர். எனவே, அந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் மட்டும் நடைபெறும்.

ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிப்பு

நமது நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 3,794 கோடி டாலராக இருந்தது. இது நமது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடி ஆகும்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டதன் படி, இந்தியா நிகழாண்டு கூன் மாதத்தில் 3,794 கோடி டாலர் மதிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில், வர்த்தகப் பற்றாக்குறையும் இதுவரை இல்லாத அளவுக்கு 2,563 கோடி டாலரை எட்டியது.

2022 ஏப்ரல் முதல் 2023 ஜூன் வரை நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி 47.31% அதிகரித்து, 18,702 கோடி டாலரானது. வர்த்தகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,412 கோடி டாலரிலிருந்து, 7,025 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

வேளாண் கழிவுகளிலிருந்து பயோ எத்தனால்

வேளாண்மை கழிவுகளைப் பயன்படுத்தி, தொழில்துறை நொதிகள் மற்றும் இரண்டாம் தலைமுறை எரிபொருளான பயோ எத்தனால் தயாரிப்பது குறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்துப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்பா-அமைலஸ் செல்லுலோஸ் போன்ற தொழில்துறை நொதிகள் அதிகமாக தேவைப்படுகின்றன. இந்த நிலையில், பேசிலஸ் எஸ்பி பிஎம்06 எனப்படும் பாக்டீரியா தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய எவ்வாறு உதவுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த செலவில், லிக்னோசெல்லுலோசிக் கழிவுகளை முன்பதப்படுத்துதல் எதுமின்றி பிரிக்கும் திறன் கொண்ட உயிரியை தனிமைப்படுத்தியுள்ளனர். அதன் படி, ஆண்டுதோறும் ஏறத்தாழ 100 முதல் 150 டன் வரையிலான எடை கொண்ட உயிரி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் தான், கரும்புக் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாசிலஸ் எஸ்பி பிஎம்06 பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

தொழில்துறை நொதிகள் மற்றும் வேளாண்மை கழிவுகளில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த பாக்டீரியா உதவிகரமாக இருந்தது.

ஸ்டார்ட்-அப் பட்டியலில் முன்னணி முதல்வர் பாராட்டு

மாநிலங்களின் ஸ்டார்ட்-அப் பட்டியலில் தமிழகம் முன்னணி இடம் பெற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஸ்டார்ட்-அப் சூழ்லை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs | Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்