2023 - 24 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களின் திறனை கண்டறியும் வகையில் திறனாய்வுத்தேர்வு நடத்த தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
இந்த தேர்வு மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பங்கேற்க்கலாம். தற்போது நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு முறையில் 500 மாணவர், 500 மாணவியர் என்று மொத்தம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1000/- என்ற கணக்கில் ரூ.10,000/- அளிக்கப்படும். இது மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரையில் தரப்படும்.
குறிப்பு - ஒரு வருடத்திற்கு மொத்தம் 10 மாதம் மட்டுமே கல்வியாண்டு என்பதால் ரூ.10,000/- அளிக்கப்படுகிறது.
இந்த தேர்வு மொத்தம் இரண்டு தாளாக நடத்தப்படும். முதல் தாள் 60 வினாக்கள் கணிதம் தொடர்பாக இருக்கும். இரண்டாம் தாள் 60 கேள்விகள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்து இருக்கும். இதில் கேட்கப்படும் கேள்விகள் 9, 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டது.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். தரவுகளை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் பள்ளி தலைமையாசிரியரிடம் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் தர வேண்டும்.
தமிழக அரசின் இந்த திறனாய்வுத்தேர்வு 23.09.2023 சனிக்கிழமை அன்று, முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் , இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…