Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DRDO Recruitment 2022 for Engineers Through Gate: DRDO -வில் புதிய அறிவிப்பு…! அருமையான சம்பளத்தில் வேலை ரெடி…! சீக்கிரம் விண்ணப்பியுங்க….

Gowthami Subramani June 15, 2022 & 13:50 [IST]
DRDO Recruitment 2022 for Engineers Through Gate: DRDO -வில் புதிய அறிவிப்பு…! அருமையான சம்பளத்தில் வேலை ரெடி…! சீக்கிரம் விண்ணப்பியுங்க….Representative Image.

DRDO Recruitment 2022 for Engineers Through Gate: DRDO 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (DRDO recruitment 2022 for Engineers Through GATE).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

பணியின் பெயர்

Junior Research Fellow

காலிப்பணியிடங்கள்

02

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 17, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 07, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (DRDO Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (DRDO Job Vacancy)

Junior Research Fellow

02

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (DRDO Recruitment 2022 Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Research Fellow

ரூ. 31,000 -HRA மற்றும் மருத்துவ வசதிகளுடன் அந்தந்த வாரியத்திலிருந்து வழங்கப்படும்

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் GATE தகுதியுடன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் தொழில்முறைப் பட்டப்படிப்பான (B.E / B.Tech)-ல் முதல் பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.E / B.Tech எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் (DRDO Jobs 2022).

அதன் படி, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள், இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பாக 28 ஆண்டுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  • SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
  • SC / ST / OBC போன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் சேரும் போது தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட அசல் சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் அனுப்பப்படும் விண்ணப்பப் படிவம் மற்றும் அதன் தகுதிகளைப் பொறுத்து, PXE தேர்வு வாரியம் தகுதியானவர்களை தேர்வு செய்யும். மேலும், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம், ஆன்லைன் நேர்காணல் வரும் ஜூலை மாதம் 7 ஆம் நாள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதன் முகப்புப் பக்கத்தில், “Career”- என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • அந்தப் பக்கத்தில் இருக்கும் தேவையான அறிவிப்பினைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குரிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி

admin@pxe.drdo.in

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பப்படிவத்தை செலுத்த வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்