Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூண்டு வச்சு மாசம் லட்சம் சம்பாதிக்கலாமா | Garlic Peeling Business

Priyanka Hochumin Updated:
பூண்டு வச்சு மாசம் லட்சம் சம்பாதிக்கலாமா | Garlic Peeling Business Representative Image.

இந்த அவசர காலத்தில் மக்கள் அதிக நேரம் வேலை செய்து சம்பாதிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் மற்ற வேலைகளை சுலபமாக இருந்தால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. எனவே, அவர்கள் கடையில் மாவு, மசாலா பொடிகள், ரெடி மேட் சப்பாத்தி மாவு என்று அனைத்தையும் வாங்கின்றனர். இதே போல் ஐடியாவை வைத்து ஒரு சின்ன தொழில் வீட்லையே பண்ணலாம். அது என்னென்னு பார்க்கலாம்.

Garlic Peeling Business:

தினமும் நாம் சமைக்கும் போது அதிகமாக பயன்படுவது பூண்டு. ஆனா அந்த பூண்டு தோலை உரிப்பது செம்ம கடுப்பான விஷயம். எனவே, மக்கள் தற்போது உரித்த பூண்டை கடையில் வாங்கி பயன்படுத்திகின்றனர். நாம ஏன் அதையே தொழிலாக மாற்ற கூடாது. இதற்கு நீங்கள் தனியாக இடமோ, வாடகையோ, லட்சக்கணக்கில் மெஷின் வாங்கியோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு என்ன தேவை - பூண்டு மற்றும் தோல் உரிக்க மெஷின் (Garlic Peeling Machine).

இந்த மெஷின் மாடலுக்கு ஏற்ப விலையில் மாறுபடும். இருப்பினும் ஆரம்ப விலை வெறும் ரூ. 10,000/- மட்டுமே. அதில் ஒரே வேலையில் 5 முதல் 10 கிலோ வரை பூண்டு தோலை நம்மால் உரிக்க முடியும். பின்னர் உரித்த பூண்டை 1/2 கிலோ, 1 கிலோ என்று பிரித்து பாக்கெட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். உங்க ஏரியாவில் இருக்கும் மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் தனியாக உங்கள் வீட்டிலையே விற்கலாம்.

கடையில் சராசரியாக 1 கிலோ பூண்டு ரூ. 90 - 100/-க்கு விற்கிறது. எனவே, கணக்கு போட்டு பாருங்கள் தினமும் 30 கிலோ பூண்டு விற்றாலே ரூ. 2,700 - 3,000 வரை ஈஸியா லாபம் பார்க்கலாம். இப்ப சொல்லுங்க இது நல்ல லாபம் தரும் தொழில் தானே. இருப்பினும் ஆரம்பிக்கும் முன்பு உங்கள் அக்கம் பக்கத்தில் இதற்கு தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்று விசாரித்து ஆரம்பியுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்