Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.69,100/- சம்பளத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை.. 10வது படிச்சிருந்தா போதும்..

Nandhinipriya Ganeshan Updated:
ரூ.69,100/- சம்பளத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை.. 10வது படிச்சிருந்தா போதும்..Representative Image.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (Central Reserve Police Force – CRPF) காலியாக உள்ள 9,223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே மத்திய அரசு வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் All Over India-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

காலியிடங்களின் எண்ணிக்கை:

ஆண்/பெண் என இருபாலருக்கும் தனித் தனியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்கள் பிரிவில் 9105 இடங்களும், பெண்கள் பிரிவில் 107 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித்தகுதி: 

இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அதே சமயம், ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

Mechanic Motor Vehicle பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு, உடல்நிலைத் தேர்வு (PST), திறனறிவுத் தேர்வு (PET), வர்த்தகத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, விரிவான மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். மேலும், SC மற்றும் ST பிரிவை சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

சம்பளம்: 

மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

கடைசி தேதி: 25 ஏப்ரல் 2023

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://crpf.gov.in/ -க்கு செல்லவும். CRPF Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும். 

பிறகு, https://crpf.gov.in/ இணைப்பிலிருந்தோ (CRPF Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CRPF Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

தேவையான தகவல்களை தவறில்லாமல் பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் ஃபோன் நம்பரை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்